Monday, May 21, 2012

ஈழம் விடுதலை அடையும்! கொளத்தூர் மணி, வைகோவுடன் இணைந்து நானும் ஈழம் செல்வேன்: சத்தியராஜ் (காணொளி இணைப்பு)



sathyaraj
தமிழீழ விடுதலைக்காகவும் தமிழக மக்களுக்காகவும் பல்லாண்டுகளாக தொடர்ந்து போராடும் பெரியார் திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திமுகவின் போராட்டங்களுக்கு தமிழக மக்கள் தங்கள் தார்மீக ஆதரவினை வழங்க வேண்டும், இவர்களின் போராட்டத்தால் ஈழம் விடுதலை அடையும் அப்பொழுது கொளத்தூர் மணி, வைகோ அவர்களுடன் சேர்ந்து நானும் தமிழீழம் செல்வேன் என்று சென்னை எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய “அய்.நாவே தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்து” உரிமை முழக்க பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் உரையாற்றினார்.


பெரியார் திராவிடக்கழக துணைத்தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துரைகளை பெரியார் திராவிடகழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்,பெரியார்திராவிடக்கழக கோவை பொதுச்செயலாளர் இராமகிருட்டினன்,உள்ளிட்ட இனஉணர்வாளர்களுடன்,பெரியார் திராவிடக்கழக தலைவர் கொளத்தூர் மணி,இனமான நடிகர் சத்தியராஜ் ஆகியோர் சிறப்பு கருத்துரைகளை நிகழ்த்தினார்கள்,உரிமைமுழக்க உரையினை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நிகழ்தினார் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்கள் இனஉணர்வினை வெளிப்படுத்தினார்கள்.

No comments:

Post a Comment