.பிரித்தானியாவில் இருந்து இலங்கையர்களை நாடு கடத்துவது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்திரசர்மாவினால் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள இலங்கை அகதிகளுள் ஒரு தொகுதியினர் இந்த மாதம் 31ம் திகதி அங்கிருந்து நாடுகடத்தப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையிலேயே நாடுகடத்தல் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரி யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment