Saturday, May 19, 2012

பேரெழுச்சியுடன் சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

chennaiஇலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில்  சிறீலங்கா அரசால் 2009 மே 17,18 அன்று முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று 17.05.2012 மாலை சென்னை வில்லிவாக்கத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது,
இந்நிகழ்வில் அய்யா பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் நினைவேந்தல் ஒளிச்சுடரை ஏற்றினார். அதனைத்தொடர்ந்து
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கையில் மெழுகுவர்த்திச்சுடர் ஏந்தி 10 மணித்துளிகள் தங்கள் நினைவஞ்சலியினை செலுத்தினர்.
இந்நிகழ்வில் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இயக்குநர் புகழேந்தி தங்கராசு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை மதிமுக பொறுப்பாளர் வேளச்சேரி மணிமாறன் உணர்வுபூர்வமாக செய்திருந்தார். மதிமுக, பெரியார் திக தொண்டர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.












நினைவேந்தல் சுடர் நிகழ்வினை கீழ்க்காணும் காணொளியில் காணவும்


No comments:

Post a Comment