Sunday, May 27, 2012

சிறிலங்கா துரிதமாக செயற்பட வேண்டும் – மீண்டும் அழுத்துகிறது அமெரிக்கா


Michael-Posnerநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் துரிதமாகச் செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் மைக்கல் போஸ்னர், ‘கொழும்பு கசெற்‘ ஊடகத்துக்கு வழங்கியுள்ள ‘முகநூல்‘ வழி செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
“வடக்கில் படைக்குறைப்பிலும் கூட அமெரிக்கா குறிப்பிடத்தக்க ஆர்வம் காட்டியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒரு தொகையான பரிந்துரைகள் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் துரிதமாகப் பதிலளிக்கும் என்பதே எமது நம்பிக்கை.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் வொசிங்டன் பயணத்தின் போது இவை பற்றி கலந்துரையாடப்பட்டது.
மனிதஉரிமை விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா தொடர்ந்து கலந்துரையாடி வருகிறது.
வடக்கில் படைக்குறைப்பு செய்யப்படுவது குறித்தும் தமிழ் சமூகத்துக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையிலான பேச்சுக்கள் குறித்தும் அமெரிக்கா அக்கறை காண்பித்தது“ என்றும் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment