Tuesday, May 29, 2012

உலகத் தமிழர்களின் ஆதரவோடு தமிழீழத் தாயகம் நோக்கிய நாதம் வானோசை ஒலிக்கின்றது !


RADIO-TGTE1தமிழீழத் தாயகம் நோக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிற்றலை ஒலிபரப்பான நாதம் வானோசை, உலகத் தமிழர்களின் ஆதரவுடன் ஒலித்து வருகின்றது.
தமிமீழத் தேசிய துக்க நாளான மே 18ம் நாள் தொடங்கிய இந்த ஒலிபரப்பு, பிரதி ஞாயிறு தோறும் இலங்கை நேரம் இரவு 8:30க்கு, 1 மணி நேர ஒலிபரப்பாக ஒலித்து வருகின்றது.
சிற்றலை 12 250 Khz அலைவரிசையூடாக ஒலிபரப்பாகும் இந்த ஒலிபரப்பினை தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், மொறிசியஸ் உட்பட ஆசிய பிராந்தியத்தில் கேட்க கூடியதாக இருக்கும்.

மே 27ம் நாள் ஒலிபரப்பில், தமிழீழத்தில் நீதிக்காக குரல் கொடுத்து வரும் மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது சிங்கள இனவாதிகளிhல் ஏற்படுத்தப்பட்டு வரும் நெருக்கடிகள் குறித்த தகவல்கள், தென் தமிழீழத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்அவர்களது கருத்துக்கள், தமிழீழத்துக்கான பொதுசன வாக்கெடுப்பினை நடத்தக் கோரி தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஓரு கையெழுத்துப் போராட்டம் குறித்து மருத்துவர் அருள் எழிலன் அவர்களுடைய கருத்துக்கள் , பிரித்தானியாவில் இருந்து திருப்பி அனுப்பபடும்ஈழத் தமிழ் அகதிகள் விவகாரம் குறித்த தவகல்கள் மற்றும் மலேசியால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு ஆகிய விடயங்கள் பிரதான விடயங்களாக உள்ளக்கப்பட்டுள்ளன.
மே27ம் நாள் ஞாயிறு ஒலிபரப்பினைக் கேட்க :  http://soundcloud.com/tgte/27may2012
தமிழீழத் தாயகம் நோக்கிய சிற்றலை ஒலிபரப்பு குறித்த கருத்துக்களுக்கு media@tgte.org  இந்த மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ள முடியுமென நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுஇவ்வாறிருக்க, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடங்கப்பட்டுள்ள இந்த வானலை சிற்றலை ஒலிபரப்பு, சிறிலங்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள இன்னுமொரு சவாலகவே சிறிலங்கா ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
இந்த சிற்றலை வானொலி ஒலிபரப்பை இலங்கையில் கேட்காமல் தடுக்க முடியாது என்று சிறிலங்காவின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் அனுச பல்பிட்ட தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடத்தப்படும் சிற்றலை வானொலி ஒலிபரப்பு சமிக்ஞைகளை தடுப்பதற்கான கருவிகள் தம்மிடம் இல்லை என தெரிவித்துள்ள அனுச பல்பிட்ட ஆனால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் அதைச் செய்ய முடியுமென தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிற்றலை ஒலிபரப்புக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மட்டுமே அனுமதி பெற்றுள்ளது. அவர்களுக்கு மட்டும் தான் இந்த ஒலிபரப்பைத் தடுக்கும் வசதி உள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, இதுகுறித்து இலங்கை ஒலிபரப்பக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க கருத்து வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment