Thursday, June 28, 2012

12 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம்! - செங்கல்பட்டு முகாமில் நால்வர் கவலைக்கிடம்...


தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாம் ஈழத் தமிழர்கள் கடந்த 12 நாட்களாக தங்களை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது முகாமில் நான்கு பேர் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
மருத்துவமனையில் 9 பேர்கள் உண்ணாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதில் ஜகன் என்பருக்கு இதயத் துடிப்பு குறைந்து கொண்டு வருகிறது.

நர்மதன், சதீஸ் குமார் ஆகியோருக்கு சிறுநீரில் இரத்தம் வரத் தொடக்கி நிலைமை கவலைக்கிடமாகி வருகிறது,
செந்தூரன் அவர்களுக்கு இரத்தப் போக்கு தொடர்ந்து நிற்காமல் இருக்கிறது. இதனால் இந்த நால்வரின் நிலையும் மிகவும் மோசமடைந்துள்ளது.
தமிழர் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இந்த முகாம் தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து சென்ற வாரம் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
அதன் பின்பு வைகோ உட்பட பல தலைவர்கள் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டனர்.
ஆனால் இதுவரை தமிழக அரசு எந்த பதிலையும் தராமல் இழுத்தடித்துக் கொண்டு வருகிறது. அரசு அதிகாரிகளும் வாய் திறக்காமல் இருக்கிறார்கள்.
வரும் 30 ஆம் தேதி தமிழக அமைப்புகள், கட்சிகள் செங்கல்பட்டு சிறை முகாம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் அதற்குள் மருத்துவமனையில் உள்ளவர்களின் நிலை மிகவும் மோசமடையும் எனத் தெரிகிறது.
அதனால் தமிழக தலைவர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உடனே இந்த விடயத்தில் தலையிட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் ,அரசை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும் அல்லது முகாம் தமிழர்களின் உண்ணாநிலை போராட்டத்தை கைவிட அவர்களை வலியுறுத்த வேண்டும் என முகாம் தமிழர்கள் மீட்புக் குழு கேட்டுக் கொள்கின்றது.
நிலைமையின் அவசரம் கருதி உடனே செயலில் இறங்குமாறு இந்த குழு கேட்டுக் கொள்கின்றது.
தமிழகம் � செங்கல்பட்டு தடுப்பு முகாமில் கடந்த 13 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற இலங்கை தமிழ் அகதிகளை, இந்திய கம்யூனிச கட்சியின் செயலாளர் டீ.பாண்டியன் சந்தித்துள்ளார்.
அவர்கள் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அவர்களைச் சந்திக்க டீ.பாண்டினுக்கு அனுமதி வழங்கப்படவில்லை..
எனினும் பின்னர் அவர்களில் எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மனிதாபிமான அடிப்படையில் அவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இலங்கை அகதிகளுடன் பேசிய டி.பாண்டியன், அவர்களது விடுதலை தொடர்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த விடயம் குறித்து எடுத்துரைப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The UNHCR Chief of Mission in India
B-2/16, Vasant Vihar
New Delhi - 110057
India

Tel : + 91 11 4353 0444 (Switchboard)
Fax: +91 11 43530460

indne@unhcr.org
The UNHCR Head of Field Office in Chennai
No.11, 17th Cross Street
Besant Nagar
CHENNAI - 600 090.
INDIA

Tel : +91 44 2446 1734
Fax: +91 44 2446 1733

indch@unhcr.org
http://www.unhcr.org/cgi-bin/texis/vtx/contact?iso=IND&submit=Go
UNHCR (Division of International Protection)
Case Postale 2500
1211 Gen�ve 2 Depot
Switzerland
Fax: +41-22-739-7396
Email: refworld@unhcr.org

Chief Minister's Special Cell
cmcell@tn.gov.in
Chief Secretary
cs@tn.gov.in

1 comment:

  1. is to aver that all online card game rather honorable and old.
    With all these precautions arrogated, online gambling house requires strategies and guides.
    Cyber foregather cassino makes it single from the source of games that are fun but it
    is precise best-selling link up of earning would decrement.
    That free online slots with bonus games no download is to affirm that all online card game rather reliable and
    attested. With all these precautions assumed, online gaming house
    requires strategies and guides. Cyber nine gambling den makes it unique from
    the get-go of games that are fun but it is very nonclassical stand for of earning would fall.
    That
    My web site > casino roulette bonus sans d�pot

    ReplyDelete