Thursday, June 21, 2012

இலங்கையில் சிறைக்கூடங்களில் மோசமான நிலையில் வாடும் சிறைக்கைதிகள்-நீலவண்ணன்

policeஇலங்கையின் சிறைக்கூடங்களிலும் தடுப்புநிலையங்களிலும் மிக மோசமான நிலையில் சிறைக்கைதிகளும், தடுத்து வைக்கப்பட்டுள்ளோரும் கிடந்து வாடுகின்றனர்.
சர்வாதிகாரியான கிட்லரின் ஆட்சியில் எவ்விதமாகக் கைதிகள் சிறைகளில் துன்பதுயரங்களை அந்நாட்களில் அனுபவித்தனரோ அதேபோன்ற இன்னல்களையும் துயரங்களையும் இன்றைய நவீன காலத்திலும் பல தசாப்தங்கள் கழிவடைந்த நிலையிலும் இலங்கையிலுள்ள சிறைகளில் வாடும் சிறைக்  கைதிகள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜனநாயக நாடு எனவும், ஆசியாவின்  அதிசயம் மிக்க நாடாக விரைவில் திகழச் செய்யப் போகின்றோமெனப் பகிரங்கமாகத் தன்னைப் பற்றிப் பீற்றிக் கொண்டிருக்கும் மகிந்த அரசினர் பல்லாயிரக்கணக்கான சிறைக் கைதிகளைத் தடுத்து வைத்திருக்கும் சிறைச்சாலைகளில் மனித நேயமற்ற வகையில் அவர்களைச் சமூகத்துடன் இணைந்து வாழத் தகுதியற்றவர்களாகவும்இ முற்றிலுமாக சமூகத்திலிருந்து புறந்தள்ளப்பட்டவர்களாகவுமஇ; நிரந்தர நோயாளர்களாகவும் ஆக்கும் நிலையிலுமே அவர்களைச் சிறைகளில் தடுத்து வைத்திருக்கின்றது.
சிறைக்கூடங்களில் கொலைஇ கொள்ளைஇ அடிதடி மற்றும் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் எனப் பலவகையானோர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில்இ வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்றுக் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டு தூக்குதண்டனைஇ ஆயுள் தண்டனை எனப் பலவிதமான தண்டனைகளைப் பெற்றவர்கள் உட்படஇ அத்துடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள்இ கைது செய்யப்பட்டவர்களிற் பலர் அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு போதிய சாட்சியங்களோ அன்றி ஆதாரங்களோ இல்லாமையின் காரணமாக அவர்கள் மீது வழக்குத் தொடரப்படாமல் சிறையில் வீணே தடுத்து வைக்கபட்டவர்கள் எனப் பலதரப்பிலானோரும் பல்லாயிரக் கணக்கில் சிறைக்கூடங்களிலுமஇ; தடுப்பு நிலையங்களிலும் உள்ளனர்.
இவர்களிற் பலர் செய்யாத குற்றங்களுக்காகவோ அல்லது அறவே சம்பந்தப்படாத விடயங்களுக்காகவோ வீணேபல வருடங்களாகக் குடும்பங்களைத் தாய்இ தந்தை உறவுகளைப் பிரிந்து அநியாயமாக சிறைக்கூடங்களிலும்இ தடுப்புக்காவலிலும் வாடி வதங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் ஒருசிலர் பத்தாண்டுகளுக்கு மேலாக வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் வாடி வதங்குகின்றனர்.
இவர்கள் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல பாதிப்புகளுக்கு உள்ளாகிய நிலையில் மனநோயாளிகளாகவும் நிரந்தர நோயாளர்களாகவும் மாறிவிடக் கூடிய வாய்ப்புக்களே அதிகமுள்ளன.
வெலிக்கடைச் சிறைச்சாலையின் பிரதி ஆணையாளர் அசோக கப்புஆராச்சி தெரிவித்த கருத்துகள் சிறைக்கூடங்களின் சீர்கேடான நிலைமையினைக் கோடிட்டுக் காண்பிப்பவையாக அமைகின்றன.
’1976ஆம் ஆண்டு ஆனிமாதம் 5ஆம் திகதி தொடக்கம் இலங்கையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ஆயுள் தண்டனை என்பது 20 வருடங்கள் நீடிக்கும். ஆயினும் சிறைச்சாலை விதிகளின் பிரகாரம் அவரவர் நன்னடத்தைகளின் அடிப்படையில் அத்தகையவர்களின் தண்டனைக் காலம் 12 அல்லது 14 வருடங்களாகக் குறைக்கபட்டு சிறைவாசம் அனுபவித்த பின்னர் விடுவிக்கப்படுவர்’ எனக் கூறினார்.
மேலும்இ சிறைச்சாலை அமைச்சின் செயலாளரான திஸ்ஸநாயக்க கூறுகையில் ‘தற்சமயம் இவ்விதமாக மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டவர்கள் 854 பேர்கள் சிறைக் கூடங்களில் உள்ளனர்’ எனத் தெரிவித்தார்.
மேலும் ‘நாட்டின் ஏனைய சிறைக்கூடங்ககளிலும்இ தடுப்புநிலையங்களிலும் சுமார் 25000 பேரளவில் உள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.
தன்னை அடையாளப்படுத்த விரும்பாத சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘இங்குள்ளவர்களிற் சிலர் 10 தொடக்கம் 30 வருடங்களாக இருக்கின்றனர். அல்லாமலுமஇ; அவர்களிற் பலர் பல்வகை தீராத நோய்களைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர்களாகவும் உள்ளனர்’ எனத் தெரிவித்தார்.
அதனை உறுதிப்படுத்துவது போல மிக அண்மையிலும் சிறைக்குள் நோயினால் மரணமடைந்த கைதி ஒருவர் எயிட்ஸ் வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தார் என்பதைப் பிரேத பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் 352 மறியற்கூடங்கள் உள்ளனவென்றும் 352 மறியற்கூடங்களுக்கும் 17 மலசலகூடங்கள் மட்டுமே கைதிகளின் பாவனைக்கு உள்ளவென்றும் தெரியவந்துள்ளது.
2012 மே மாதம் 15 ஆம் திகதிப்பதிவின் படி வெலிக்கடைச் சிறைச்சாலையில் 4146 கைதிகள் இருந்துள்ளதாக அறிய முடிந்தது.
மலசலகூடங்களின் பற்றாக்குறையின்  நிமித்தமாக சிறைக்கூடங்களிலுள்ள கைதிகளுக்கு அவர்களின் இயற்கை உபாதைகளைப் பூர்த்தி செய்வதற்கென சிறைக்கூடங்களில் பிளாஸ்ரிக் வாளிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றினுள்ளேயே அவர்கள் சிறுநீர்க் கழிக்க வேண்டும். அப்பிளாஸ்ரிக் வாளிகள் அவரவர்களின் சிறைக்கூடங்களுக்குள்ளேயே 24 மணிநேரமும் இருந்த வண்ணம் இருக்கும். இத்தகைய நிலைப்பாடு இன்று நேற்றல்ல நீண்டகாலமாகவே நீடிப்பது புரியவந்தது.
மேலும்இ தன்னை இனங்காட்ட விரும்பாத அவ்வதிகாரி கூறுகையில் ‘கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாகச் சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சர்களோஇ அமைச்சின் செயலாளர்களோஇ சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் போன்றவர்களோ அன்றி வேறெவருமோ ஒருபோதும் இச்சிறைச்சாலைகளின் மோசமான நிலைமைகளை வந்து பார்க்கவுமில்லை அவற்றினைச் சீரமைப்பதற்கான முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளவுமில்லை எனவும், முன்னர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்த கரலியட்ட என்பவர் ஓர் சிறந்த மனிதரெனவும் அவர் வெளியேறிய பின்பு உள்ள அமைச்சரோஇ செயலாளரோஇ ஆணையாளர் நாயகமான கொடிப்பிலியோ சிறைச்சாலை வளாகத்திற்குள் காலடியெடுத்து வைக்கவில்லையெனக் கவலை தெரிவித்தார்.
அதுமட்டுமன்றி அங்கு நிலவும்  உண்மை நிலைமைகளை ஒளித்தும் வைக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இவ்விதமான குற்றவாளிகளோ அல்லது சந்தேக நபர்களோ யாராக இருப்பினும் அவர்களும் மனிதர்களே. அவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் நிமித்தம் சிறைகளுக்குச் செல்கின்றனர். தடுத்துவைக்கப்படும் சிறைக்கூடங்களிலும் அவர்கள் அடிப்படை வசதிகளின்றித் தவிக்கின்றனர். நீண்டகாலமாகத் தங்க வைக்கப்படுகின்றனர். அத்துடன் அவர்கள் மனித நேயமின்றியும் நடத்தப்படுகின்றனர்.
இவற்றின் மூலமாக அவர்களின் உடல்நலமும்இ உளநலமும் அன்றாடம் படிப்படியாக வெளிப்பார்வைக்குத் தெரியாமலே பாதிப்புக்குள்ளாகின்றது. இதுவும் ஓர் வகையான சித்திரவதையே என்பதில் சிறிதும் ஐயம் கொள்ளத்தேவையில்லை.
இறுதியில் பல வருடங்களாக இவ்வித இன்னல்களுக்கு முகங்கொடுத்ததன் பின்னர் அவர்கள் சிறைக்கூடங்களிலோ அல்லது தடுப்பு நிலையங்களில் இருந்து வெளியேறிச் செல்லுகையில் மன நோயாளிகளாகவோ அல்லது நிரந்தர நோயாளர்களாகவோ சமூகத்தில் ஈடுகொடுத்து வாழ முடியாதவர்களாகவோ இருப்பர். இது கூட ஓர் அடிப்படை மனித மீறலேயாகும்.
இவ்வாறே எமது தமிழ்க் கைதிகள் சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கில் சிறைக்கூடங்களில் நீண்டகாலமாக விடுதலையுமின்றி அத்துடன் சட்ட நடவடிக்கை எதுவுமின்றி சிறைகளில் வாடி வதங்குகின்றனர். இதுவும் ஓர் மறைமுகமான இன ஓழிப்பேயாகும். சர்வதேச சமூகம் இதுகுறித்துக் கவனம் செலுத்தித் தவிக்கும் தமிழ்ச் சிறைக்கைதிகளை மீட்டெடுக்க ஆவண செய்யவேண்டும். இல்லையெனில் அவர்களும் நிச்சயம் சமுதாயத்தில் இணைந்து வாழத் தகுதியற்ற நடைப்பிணங்களாகவே வெளிவருவர் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
-நீலவண்ணன்-
நன்றி: tamil24news.com

No comments:

Post a Comment