Wednesday, June 20, 2012

மகிந்த பிடெல் காஸ்ரோவைச் சந்திக்க எடுத்த முயற்சி படுதோல்வியில் முடிவு

851491c4a4b81e7bab5bac45e3363828கியூபாவிற்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கீயூபாவின் விடுதலை வீரனும் முன்னாள் ஜனாதிபதியுமான பிடெல் காஸ்ரோவைச் சந்திக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ரோ, உலகில் மதிப்புக்குரிய தலைவர்களில் ஒருவராக கருதப்படுவதோடு தற்போது ஓய்வில் உள்ள அவர், கியூபா மக்கள் மனதில் செல்வாக்குமிக்க ஒருவராகவே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவரைச் சந்தித்துப் பேச ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளிவிவகார அமைச்சின் ஊடாக பல முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும் ஆனால் பிடெல் காஸ்ரோவை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
கியூபாவிற்கு விஜயம் செய்யும் பல்வேறு நாட்டு தலைவர்களையும் பிடெல் காஸ்ரோ சந்தித்திருக்கின்ற போதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அவர் சந்திக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
எனினும், கியூபாவின் தற்போதைய அதிபரும், பிடெல் காஸ்ரோவின் சகோதரருமான ரவுல் காஸ்ரோ, துணை அதிபர் மரினோ முரிலோ ஜோர்ஜ் ஆகியோரை மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
source:by tamil24

No comments:

Post a Comment