Wednesday, June 20, 2012

ஜெனீவா விவகாரத்தின் தொடர்ச்சியே சிவ்சங்கர் மேனனின் சிறிலங்காப் பயணம்

d15ed41d42cf52715929264c397fd67cஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தொடர்பிலான விவகாரங்களின் தொடர்ச்சியே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் கொழும்புக்கான பயணம் என இந்தியத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அரசுமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டு சிவ்சங்கர் மேனன் இந்த மாத இறுதியில் சிறிலங்காவுக்கு வருகின்றார்.
அவரின் இந்தத் திடீர் பயணம் குறித்து பல கருத்துக்கள் எழுந்துள்ளன.
சிவ்சங்கர் மேனனின் கொழும்புப் பயணத்துக்கும் பிறேசிலில் றியோ 20 பிளஸ் மாநாட்டின்போது, மன்மோகன்சிங் – மகிந்த ராஜபக்ச இடையேயான சந்திப்புக்கும் எதுவித தொடர்பும் இல்லை. என இந்திய உயரதிகாரி ஒருவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெனீவா அறிக்கை தொடர்பிலான விவகாரங்களின் தொடர்ச்சியாகவே மேனனின் சிறிலங்காப் பயணம் அமைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிறேசிலில் சந்திப்பு மிகவும் குறுகியதொன்றாகவே இருக்கிறது“ என அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறலங்காவுக்கு மிகவும் நெருக்கமான நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஆனாலும், ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்த பின்னர், கொழும்புக்கும் புதுடெல்லிக்கும் இடையிலான உறவுகளில் தேக்கநிலை உருவாகியுள்ளது. இந்த நிலையைத் தொடர விடாமல் உறவுகளை சீர்படுத்துவதே சிவ்சங்கர் மேனனின் கொழும்பு பயணத்தின் நோக்கமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
source by ;tamil24

No comments:

Post a Comment