Thursday, July 26, 2012

சிறைச்சாலை திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வர அரசு நடவடிக்கை

447b7304935c7afa2a4d53c97a72e6f0சிறைச்சாலைகள் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் நடக்கும் முறைகேடுகள், மோசடிகள், சட்டவிரோத செயல்கள், போதைப் பொருள், பாதாள உலக செயற்பாடுகள் காரணமாக சமூக ரீதியாக பாரதூரமான நிலைமை உருவாகியுள்ளது.
இதனடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் சிறைச்சாலைகள் திணைக்களத்தை கொண்டு வருவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
இவ்வாறு சிறைச்சாலைகள், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர்,  சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு என்ற அமைச்சர் பதவி இல்லாது போய்விடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சிறைச்சாலைகள்  திணைக்களத்தை  பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவது சிறந்த விடயம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment