Wednesday, July 04, 2012

மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு சிறந்த அரசியல் சூழல் வேண்டும் முன்னாள் இராணுவத் தளபதி தெரிவிப்பு

Sarath-Fonsekaமக்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஓர் அரசியல் சூழ்நிலையை உருவாக்க வேண்டியது அவசியமானது என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் போது எனது புகைப்படத்தை காட்சிப்படுத்தி திரைப்படங்கள் கூடத் தயாரிக்கப்பட்டன. நான் ஹிட்லரைப் போன்றோ அல்லது இடி அமீனைப் போன்றோ ஆட்சி செய்வேன் என அந்தப் படங்களில் சித்திரிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு பிரசாரம் செய்த நபர்கள் ஹிட்லரை சிறையில் அடைத்தார்கள். உண்மையில் ஹிட்லரும், இடிஅமீனும் இராணுவ ஜெனரல்கள் அல்ல என்ப தனைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஹிட்லரும், இடிஅமீனும் இராணுவத்தில் மிகச் சிறிய பதவிகளை வகித்தவர்கள். சூழ்ச்சித் திட்டங்களின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிப் பின்னர் ஜெனரல் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள். இடி அமீன் இராணுவத்தில் கடமையாற்றிய சமையற்காரரில் ஒருவரா வார்.
எனினும், இராணுவ ஜெனரல்கள் உலகின் முக்கிய நாடுகளில் வெற்றிகரமாக ஜனாதிபதி பதவியை வகித்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment