Friday, July 13, 2012

செய்தி இணையங்களை நசுக்க சிறிலங்கா புதிய சட்டம்

Keheliya-Rambukwellaஇணைய செய்தி ஊடகங்களை நசுக்கும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
இதன்படி, சிறிலங்காவில் செய்தி இணையத்தளத்தை பதிவு செய்வதற்கு ஒரு இலட்சம் ரூபா அறவிடப்படவுள்ளது.
அத்துடன் ஆண்டுதோறும் அந்தப் பதிவைப் புதுப்பிப்பதற்கு 50 ஆயிரம் ரூபா கட்டணமும் அறவிடப்படவுள்ளது.
இந்தப் புதிய திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இது செய்தி இணையங்களை வடிகட்டுவதற்கான முதல் நடவடிக்கை என்று சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி சிறிலங்காவின் பத்திரிகைப் பேரவை சட்டமும் திருத்தப்பட்டு, அதில் இணைய ஊடகங்களும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளன.

No comments:

Post a Comment