தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான தடையை அமெரிக்க அரசு
மேலும் நீடித்துள்ளது. 2011ம் ஆண்டுக்கான அமெரிக்க இராஜாங்கத்
திணைக்களத்தின் பயங்கரவாத எதிர்ப்பு அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கம் வெளிநாட்டுப் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு மே மாதத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதும் அதன் நிதி வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு முழுவதும் தமிழீழ விடுதலப் புலிகள் இயக்கத்தின் நிதி வலையமைப்பு இயங்கி வந்துள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் தற்போதைக்கு மீள
உருவெடுக்கக்கூடிய அபாயம் இல்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள 2011ம்
ஆண்டுக்கான பயங்கரவாத எதிர்ப்பு அறிக்கையை வெளியிட்ட அமெரிக்க இராஜாங்க
திணைக்கள உயர்ஸ்தானிகர் பென்ஜமின் தெரிவித்துள்ளார்
source:chide
2009ம் ஆண்டு மே மாதத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதும் அதன் நிதி வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு முழுவதும் தமிழீழ விடுதலப் புலிகள் இயக்கத்தின் நிதி வலையமைப்பு இயங்கி வந்துள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.
source:chide
No comments:
Post a Comment