
திரு.சிவந்தனின் கோரிக்கைகளடங்கிய துண்டுப்பிரசுரங்கள் ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரற்போர்ட் பிரதான தொடருந்து நிலையப் பகுதியில் பரவலாக விநியோகிகப்பட்டதுடன், அவற்றை ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டவர்களுக்கு அது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
சோர்வடைந்துள்ள நிலையில் காணப்படும் திரு. சிவந்தனின் இரத்த அழுத்தம் வீழ்ச்சியடைந்து காணப்படுவதாக, அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர் திருமதி. சசிகலா இராஜமனோகரன் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அதிகரித்த மக்கள் ஆதரவு அவரை தொடர்ந்து உறுதியுடன் போராடுவதற்கான மனோபலத்தை கொடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது,
No comments:
Post a Comment