Friday, August 03, 2012

மக்களை வதைக்கின்ற மகிந்த அரசை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப மூவின மக்களும் ஒன்றிணைவோம்: சோமவன்ச அமரசேகர


வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு மாகாணங்களில் தனித்தனியான பிரச்சினை இல்லை நாடு முழுவதும் ஒரே பிரச்சினைகள் தான் எனவே இவற்றைத் தீர்க்க வேண்டுமானால் இன மத பேதங்கடந்து மூவின மக்களும் ஒன்றினைவோம் ஆதனால் இந்த அராஜகம் நிறைந்த மகிந்த அரசினை வீட்டிற்கு அனுப்ய முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசேகர தெரிவித்தார்.
மக்களை வதைக்கின்ற ஆட்சிக்கு எதிராக அணிதிரள்வோம் என்ற
தொனிப்பொருளுடன் தெய்வேந்திர முனையில் இருந்து பருத்தித்துறை வரை ஆரம்பித்த மக்கள் விடுதலை முன்னணியின் பேரணி இன்று யாழ்.நகரை வந்தடைந்தது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசேகர இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:
நாட்டில் யுத்தம் முடிந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சமாதானம் இன்றி மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கான ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் இன்னும் அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த மகிந்த அரசு இதனை இன்னும் தீர்க்கவில்லை.
அத்துடன் இந்த நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. அந்தவகையில் பல்கலைக்கழக மாணவர்கள், அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வியாபாரிகள் மற்றும் நீதவான்கள் என்று கூறிக்கொண்டே போகலாம்.
எனினும் தற்போது எமது நாட்டில் நீதவான்களுக்குக் கூட நெருக்கடி நிலமை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தினை மதிக்காத ஒரு சூழல் உருவாகியுள்ளது. நீதவான்கள் கூட இன்று அரசுக்கு எதிராக கண்டனப் போராட்டங்களைச் செய்கின்றனர்.
எனவே இவை இந்த முதலாளித்துவ ஆட்சியால் தீர்வு காண முடியாது. இவற்றைத் தீர்க்க வேண்டுமானால் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து ஒரு ஆட்சியை நிறுவி நாட்டில் உள்ள பிரச்சினைகைளுக்குத் தீர்வு காண வேண்டும். அனைவரும் ஒன்றினைந்து மகிந்த ஆட்சியைக் கவிழ்ப்போம்.
நாட்டில் நல்லதொரு சமுதாயத்தை நிலைநாட்டும் பயணத்திற்காக அங்கிருந்து இங்கு வரை பல தடைகளையும் தாண்டி வந்துள்ளோம். எமது பேரணியைத் தடுப்பதற்கு அரசு பல முயற்சிகளைச் செய்தது ஆனால் நாங்கள் வெற்றியிலக்கை அடைந்துள்ளோம். இது மகிந்த ராஜபக்சவிற்கு கிடைத்த ஒரு தோல்வி என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment