தற்போது
தடுப்புக் காவலில் உள்ள 500 முன்னாள் புலிகளில் 320 பேர் மட்டுமே
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர். எஞ்சிய 180 போராளிகளும்
விடுவிக்கப்படமாட்டார்கள் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான்
வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
போரின் முடிவில் 12,000 விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். இவர்களில்
11,500 முன்னாள் போராளிகள், பல்வேறு கட்டங்களாகப் புனர்வாழவு அளிக்கப்பட்டு
விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது 500 பேர் மட்டுமே தடுப்புக்காவலில்
உள்ளனர்.
இவர்களில் 320 பேருக்கு நீண்டகாலப் புனர்வாழ்வுப் பயிற்சிகள்
அளிக்கப்பட்டு வருகிறன். அது முடிந்ததும் அவர்கள் விரைவில் விடுதலை
செய்யப்படுவர். ஆனால் எஞ்சியுள்ள 180 பேர் விடுவிக்கப்படமாட்டார்கள்.
அவர்கள் பாரதூரமான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று
உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட
நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார்.
No comments:
Post a Comment