முகாம்களை
மூடி மக்களை வேறொரு இடத்தில் இறக்கிவிடுவதற்குப் பெயர் மீள்குடியேற்றம்
அல்ல என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது:
மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த மக்களை அங்கிருந்து அகற்றி கோவில்,
பாடசாலை ஆகிய இடங்களில் அரசு தங்கவைத்துள்ளது என எமக்குத் தகவல்
கிடைத்துள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் உரியவகையில்
குடியமர்த்தப்படவேண்டும். மாறாகக் கொட்டில்களை அமைத்து மக்களை காட்டுப்
பகுதியில் இறக்கிவிடுவது மீள்குடியேற்றமல்ல. மெனிக்பாம் முகாமிலிருந்து
வெளியேறியுள்ள மக்களுக்கு அரசு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்
என்று கூறினார் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க.
No comments:
Post a Comment