இராணுவத்திலிருந்து
இதுவரையில் 65 ஆயிரம் இராணுவ வீரர்கள் தப்பியோடியுள்ளதுடன் அவர்களில் 35
ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர்
ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இவ்வாறு தப்பியோடிவர்களில் மாதம் ஒன்றிற்கு 400 தொடக்கம் 500 பேர் வரை கைது செய்யப்படுவதாகவும் அவர்களில் வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபடாதவர்கள் இராணுவத்திலிருந்து சட்டரீதியாக விலகிச் செல்ல அனுமதிக்கப்படுவதுடன் ஏனையோருக்கு ௭திராக சட்ட நடவடிக்கை ௭டுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலப்பகுதியிலேயே மேற் படி 35 ஆயிரம் இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் அநேகமானோர் சட்ட ரீதியாக சேவையிலி ருந்து விலகிச் சென்றுள்ளதுடன் சிலர் தொடர்ந்தும் இருக்கின்றனர். இவ் வருட ஜனவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்ட இராணுவ வீரர்களில் வேறு குற்றச் செயல்களில் ஈடுபடாத 12600 பேர் சட்ட ரீதியாக இராணுவத்திலிருந்து தண்டனைகளின்றி விலகிச் செல்ல அனுமதிக்கப்படுவதுடன் வேறு பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு ௭திராக சட்ட நடவடிக்கை ௭டுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment