ஒரு பலம்வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு, எமது மக்களி;ன் விடிவுக்காக
உலகத்தமிழினம் உரிமைக்குரல் எழுப்ப வேண்டும் என்று தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன் அவர்கள் விடுத்த அழைப்பை சத்திய வாக்காக சிரமேந்கொண்டு
புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் தமிழின விடுலைக்காக ஓயாது
களமாடிவருகின்றனர்.
இன்றும் அந்த விடுதலைப்பாதையில் நின்று வழுவாது "எமது நிலம் எமக்கு வேண்டும்" என்ற முழக்கத்துடன் ஜெனீவாவில் அலைகடல் எனத்திரண்டுள்ளது மறத்தமிழர் கூட்டம்.
முள்ளிவாய்க்கால் போர்க்களம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது மக்களை வெளியேவிடுங்கள் நாங்கள்(உலகம்) அவர்களது பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்துகின்றோம் என்று அழைத்த உலக நாடுகளும் உலகமகா சபையும் மூன்று வருடங்களாகியும் ராசபக்சேவின் கொடுங்கரங்களிற்குள் சிக்குண்டு சிதைக்கப்பட்டுவரும் எமது சொந்தங்களை ஏன் என்றும் திரும்பிப் பார்க்காது மாபெரும் துரோகமிழைத்து நிற்கின்றது.
முழு உலகமுமே சிங்களத்துடன் ஒன்றுசேர்ந்து தமிழினத்தை அழித்துவிட்டு இன்றும் கள்ளமௌனம் காத்து அநீதி இழைத்து நிற்கும் புறச்சூழலில் எமக்கான நியாயத்தை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் போராட்டங்களை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பன்னிரு நாள் அன்ன ஆகாரம் இன்றியும் துளி நீர் நாவில் படாமலும் சத்திய வேள்வியில் குளித்து தியாக தீபமாக உயர்ந்து நிற்கும் திலீபன் அண்ணாவின் 25வது நினைவெழுச்சி நாட்களின் இறுதிநாளில் ஜெனீவாவில் அலைகடல் எனத்திரண்டுள்ள மறத் தமிழர்கள் ஐ.நா.சபை முன்றலான முருகதாசன் திடலை நோக்கி விடுதலை முழக்கங்களுடன் அணிவகுத்தனர் .
பொங்கு தமிழராக ஜெனீவா திரண்டிருப்பவர்கள் தமிழீழத் தேசியக் கொடியை தமது கைகளில் ஏந்தியவாறு உற்சாகமாக காணப்படுகின்றனர்.
No comments:
Post a Comment