நடந்து
முடிந்துள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் எந்தவொரு கட்சியும்
அறுதிப்பெரும்பான்மையினை பெறாதநிலையில் ஆட்சியை தீர்மானிக்கும்
சக்தியாகவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிரேஷ்ட உறுப்பினர்களுடனான
கலந்துரையாடலின் பின்னரே யாருக்கு ஆதரவு வழங்குவதென இறுதியான தீர்மானம் எடுக்கப்படுமென கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் கூறுகையில், முஸ்லிம்கள்
பெரும்பான்மையாக வாழும் அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றிபெற்றுள்ளோம். இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
மாகாண சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்மைப்பும் பேச்சுக்கள் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment