Sunday, September 09, 2012

இலங்கையர் பாதுகாப்புக் குறித்து தமிழக அரசுடன் புதுடில்லி பேச்சு

delhimapstoryஇலங்கை யாத்திரிகர்களின் பாதுகாப்பு விவகாரம் குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு இந்திய மத்திய அரசு கொண்டு சென்றுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்ட இலங்கை யாத்திரிகர்கள் குழுவொன்று இலங்கை அரசினால் விசேட விமானம் அழைத்து வரப்பட்டதுடன் அதற்குமுன்னர் இலங்கையிலிருந்து சென்ற இரு உதைபந்தாட்ட அணிகள் தமிழக அரசினால் திருப்பி அனுப்பப்பட்டன.
யாத்திரிகள் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்தின் பின்னரும் இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என இந்திய மத்திய அரசு அறிக்கையொன்றில் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த விடயத்தை தமிழக் அரசின் கவனத்துக்கு இந்திய மத்திய கொண்டு சென்றுள்ளதாகவும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும்போது மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறை ரீதியான விடயம் இதுவெனவும் ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  வர்த்தகர்களினால் கையளிக்கப்பட்ட மூன்று மனுக்களை புதுடில்லிக்கு இந்தியத் தூதரகம் அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment