வவுனியா
செட்டிக்குளம் மெனிக் பாம் நலன்புரி நிலையம் நேற்றுமுதல் உத்தியோகபூர்வமாக
மூடப்பட்டுள்ளது. இந் நிலையத்திலிருந்த அனைவரும் மீள்குடியேற்றப்பட்டதைத்
தொடர்ந்து இவை நேற்று முதல் மூடப்பட்டதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.எச்.ஜே.பி. சுகததாஸ தெரிவித்தார்.மெனிக் பாம் நலன்புரி நிலையத்தில் எஞ்சியிருந்த 361 குடும்பங்களைச் சேர்ந்த 1187 பேரும் நேற்றையதினம் முல்லை த்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்நலன்புரி நிலையம் மூடப்படுவதாக செயலாளர் தினகரனுக்குக் கூறினார்.
மந்துவில் பிரதேசத்தில் 251 குடும்பங்களைச் சேர்ந்த 827 பேரும்,
கேப்பாப்பிலவில் 110 குடுபங்களைச் சேர்ந்த 360 பேரும் நேற்றையதினம் முல்லைத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வன்னி கட்டளைத் தளபதியும்.
இடம் பெயர்ந்தவர்களின் விவகாரங்களுக்கான தகுதிவாய்ந்த அதிகாரியுமான மேஜர் ஜெனரல் பொனிபேஸ் பெரேரா முகா மிலிருந்த மக்களை வழியனுப்பி வைத்தார். ஐ.ஓ.எம். நிறுவனத்தின் ஏற்பாட்டில் 50 லொறிகள் மற்றும் 24 பஸ்களில் மெனிக் பாமிலிருந்தவர்கள் அனுப்பிவைக்கப் பட்டனர். இவர்களின் உடமைகள் மற் றும் கால்நடைகளும் லொறிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.
முல்லைத்தீவுக்கு அழைத்துச்செல்லப் பட்டவர் கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டு பதிவுகளைத் தொடர்ந்து இன்றையதினம் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடிய மர்த்தப்படுவார்கள் என முல்லைத்தீவு மாவட்டத்தின் திட்டமிடல் பணிப்பாளர் பவானி கணேசமூர்த்தி தெரிவித்தார்.
இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மெனிக் பார்மிலிருந்து அழைத்துச்செல்லப் பட்ட மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும், அவர்களின் வாழ்வா தாரத்தை உயர்த்துவதற்கும் தேவையான உதவிகளைச் செய்துகொடுப்பதற்குத் தாம் தாயாராகவிருப்பதாக மேஜர் ஜெனரல் பொனிபேஸ் பெரேரா குறிப் பிட்டார்.
2009ஆம் ஆண்டு மே மாதம் பூர்த்திய டைந்த பாதுகாப்புத் தரப்பினரின் மனித நேய நடவடிக்கையின் போது இடம் பெயர்ந்த 300,000 பேர் செட்டிக்குளம் மெனிக்பாமில் தங்க வைக்கப்பட்டனர்.
மனிதநேயப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் மெனிக் பாம் முகாமில் தங்கவைக் கப்பட்டு வந்தனர். இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மெனிப் பாமில் 7 நலன்புரி கிராமங்கள் அமைக்கப்பட்டன. கதிர்காமர் நலன்புரி கிராமம், ஆனந்தகுமாரசாமி நலன்புரி கிராமம், பொன் இராமநாதன் கிராமம், அருணாச்சலம் கிராமம், மருதமடு நலன் புரி கிராமம் என அவற்றுக்குப் பெயரிடப் பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டனர். மனித நேயப் பணிகள் பூர்த்தியடைந்து
மீள்கட்டுமானப் பணிகளும், புனரமைப்புப் பணிகளும் ஆரம்பிக்கபட்ட பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்திசெய்யப்பட்ட இடங்களில் மக்களைப் படிப்படியாக மீள்குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. மக்கள் தமது சொந்த இடங்களில் படிப்படியாக மீள்குடியேற்றப்பட்டதும் நிவாரணக் கிராமங்களும் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வந்தன.
இந்த நிலையில் 361 குடும்பங்களைச் சேர்ந்த 1187 பேர் எஞ்சியிருந்தனர். இவர்களே நேற்று சொந்த இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
இடம்பெயர்ந்த சகல மக்களையும் குறுகிய காலத்துக்குள் மீள்குடியமர்த்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்திருந்த நடவடிக்கைகளை பல்வேறு சர்வதேச நாடுகள் பாராட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment