Tuesday, September 25, 2012

இலங்கையின் அபிவிருத்திக்காக பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்: நோர்வே

norway_flag_001இலங்கையின் அபிவிருத்திக்காக பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை – நோர்வே வர்த்தகப் பிரமுகர்களுக்கு இடையில் விசேட சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான நோர்வேயின் புதிய தூதுவர் க்ரேட் ஹோசென் தெரிவித்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அபிவிருத்திக்காக முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும்.

குறிப்பாக மீன்பிடித்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றுக்கு கூடுதலான ஒத்துழைப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்காக நோர்வே வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment