Thursday, September 06, 2012

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்படும்

SOUTH2(4)உயர் நீதிமன்றத்தின் கட்டளைக்கமைய அடுத்த கல்வியாண்டில் கூடுதலான மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை அமைக்கம் வேலையை துரிதப்படுத்தும் அதேவேளையில் அம்பாறை, ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய பொறியியல் பீடம் ஒன்றும் அமையவுள்ளது என அதிகாரிகள் நேற்று கூறியுள்ளனர்.
4828 மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்மொழிவை
உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது. இதன்படி மாணவர் அனுமதி எவ்வித தயக்கமுமின்றி அதிகரிக்கப்படும் என உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ன டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.
‘குறைந்தபட்சம் 200 மாணவர்களை அனுமதிப்பதற்காக நாம் தென்கிழக்கு பல்கலைக்ழகத்தல் பொறியியல் பீடத்தை நிறுவத் திட்டமிட்டுள்ளோம். அத்துடன் யாழ்ப்பாணம் பொறியியல் பீடம் தொடர்பான வேலைகளும் விரைவுபடுத்தப்படும். பொறியியல் துறைக்கு கூடுதல் மாணவர்களை அனுமதிப்பத்திரம் மட்டுமே எமக்கு கஷ்டங்கள் உள்ளன. கலை, முகாமைத்துவம் போன்ற வேறு பட்டப்படிப்புகள் தொடர்பில் பெரிய பிரச்சினை ஏதுமில்லை’ என அவர் கூறினார்.
திடீரென இவ்வளவு அதிகமான மாணவர்களை சேர்த்துக்கொள்ளவது பல்கலைக்கழக முறைமையினல் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. இதையிட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் பேசப்படும் என உபவேந்தர்களின் குழு கூறியுள்ளது.
மருத்துவம், பொறியியல் ஆகியன அதிக செலவுள்ள பட்டப்படிப்புகளாகும், இதில் கூடுதல் மாணவர்களை சேர்ப்பதற்கு ஏராளமான உட்கட்டமைப்பு வசதிகள் தேவை என  அக்குழுவின் தலைவரும் றுகுணு பல்கலைக்கழக உபவேந்தருமான பேராசிரியர் சுசிரித் மெண்டிஸ் கூறினார்.

No comments:

Post a Comment