Saturday, September 15, 2012

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் பிரதிநிதிகள் இலங்கை வருகை! திங்கள் யாழ்.விஜயம்

23(6)ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அதிகாரிகள் மூவர் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை விரைவில் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும் வகையிலேயே இவர்களது விஜயம் அமைந்துள்ளது.
ஹெனீ மெகாலி தலைமையில் விஜயம் செய்துள்ள இக்குழுவினர் ஒரு வாரகாலம் இலங்கையில் தங்கியிருப்பார்கள்.
இந்தக் குழுவினர் ௭திர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இவ் விஜயத்தின் போது யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி மற்றும் யாழ்.
மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரைச் சந்தித்து யாழ். மாவட்ட நிலமைகளைக் கேட்டறிந்து கொண்ட பின்னர் யுத்தத்திற்குப் பின்னரான மீள்குடியேற்ற நிலைமைகளையும் பார்வையிடுவதற்காகவும் அப்பகுதி மக்களைச் சந்தித்து கலந்துரையாடுவதற்குமாக அரியாலை மற்றும் தென்மராட்சிப் பிரதேசங்களுக்கும் சென்று நிலைமைகளை நேரடியாக அவதானிக்கவுள்ளனர்.
அடுத்து யாழ். மனித உரிமை செயற்பாட்டாளர்களைச் சந்தித்து யாழ். மாவட்டத்தில் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாகவும் யுத்தத்திற்குப் பின்னரான மனித உரிமை நிலவரங்கள் தொடர்பாகவும் ஆராயவுள்ளனர்.
தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையை யாழ். ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன் யாழ். மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவையும் சந்திக்கவுள்ளனர்.
அடுத்து மாலை 4 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம்செய்து இறுதி யுத்த பாதிப்புக்களையும் மீள்குடியமர்ந்த மக்களையும் பார்வையிட்டு நிலைமைகளையும் கேட்டறிந்து கொள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment