Sunday, September 23, 2012

உயிர் கொடை செய்த வீரத்தமிழ்மகன் தங்கவேல் விஜயராஜ் அவர்களுக்கு பிரித்தானியாவில் நடைபெற்ற வணக்க நிகழ்வு!

btu210912vijayaraj200newsதீயில் சங்கமமாகி  தமிழர்களுக்காய் தன் உயிர் கொடை செய்த வீரத்தமிழ்மகன் தங்கவேல்  விஜயராஜ் அவர்களுக்கு நினைவு வணக்க  நிகழ்வு பிரித்தானியாவில் நேற்று (21-09-2012) நடைபெற்றது.
வடமேற்கு லண்டன் பகுதியில் அமைந்துள்ள புறோக்சைட் கொமியூனிட்டி சென்ரர் மண்டபத்தில் மாலை 7:00 மணி முதல்  9:00 மணிவரை பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு  நடைபெற்றது.
நிகழ்வில் ஈகச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரனான திரு.கிருபா அவர்கள் ஏற்றிவைத்தார். ஈகச்சுடர் விஜயராஜின் திருவுருவப்படத்திற்கான மலர்மாலையினை மூன்று மாவீரர்களின் சகோதரனும்இ நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் குடும்பநலன் பேணல் அமைச்சருமான திரு.சேகர் அவர்கள் அணிவித்தார். தொடர்ந்து அகவணக்கமும்இ மலர் வணக்கமும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் நினைவுரைகளை தமிழகத்தைச் சேர்ந்த N.அரசு அவர்களும்இ நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினரான திரு.நிமலன் அவர்களும்இ பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தைச் சேர்ந்த திரு.மாறன் அவர்களும் நிகழ்த்தினர்.
அத்தோடு இந் நிகழ்வில் வீரத்தமிழ்மகன் தங்கவேல் விஜயராஜ் அவர்களுக்கு பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தால் 19.09.2012 அன்று வெளியிடப்பட்ட இரங்கல் அறிக்கையும் வாசிக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியாக விலைமதிப்பற்ற உயரிய உயிரை தீயிற்கு இரையாக்கும் போராட்டங்களை தவிர்த்து உலகமே வியக்கும் விதத்தில் வெவ்வேறு வடிவங்களில் எம்முள் உள்ள ஆற்றலை வைத்து தமிழீழ விடுதலைப் போரை நடாத்துவோம் என உறுதி எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment