Sunday, September 23, 2012

ஜனநாயகமும் சட்டமும் இலங்கையில் சீர்குலைவு; தயாசிறி குற்றச்சாட்டு

lowமாலக்க சில்வாவினால் இராணுவ மேஜர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரமானது நாட்டின் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் சீரழிந்துள்ளமைக்குத் தெளிவான அறிகுறியாகும் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
”நபர் ஒருவரை அமைச்சர் மேர்வின் சில்வா மரத்தில் கட்டியமை, துமிந்த சில்வா மற்றும் பாரத லக்க்ஷ்மன் பிரேமச்சந்திர விவகாரம், தற்போது இராணுவ மேஜர் ஒருவர் மாலக்க சில்வாவினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் என்பன, சக்திவாய்ந்த நபர்களுடன் முரண்பட வேண்டாம், என்ற செய்தியையே கூறுகின்றன. அப்படி முரண்பட்டால் சட்டம் உங்களுக்கு எதிராகச் செயற்படும். இவ்வாறான செய்தியை கூறும் அளவுக்கு நாடு கீழிறங்கிவிட்டது. ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் சீரழிந்துள்ளது” என அவர் தெரிவித்தார்.
அரசின் அங்கத்தவர்கள் பலரும் தற்போதைய நிலைமை குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாக அவர்கூறினார். ”இவ்விடயம் குறித்து நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர், என்னிடம் பேசிய அமைச்சர் ஒருவர் தனது மனதிலும் இவ்வாறான கருத்தே உள்ளதாகக் கூறினார். அதைப் பகிரங்கமாக ஏன் அவர் பேசவில்லை எனக் கேட்ட போது போது, அவ்வாறு பேசும் நிலையில் தான் இல்லை எனக் கூறினார்.
இந்தச் சம்பவமானது சட்டமும் ஒழுங்கும் கீழிறங்கியுள்ள நிலையை வெளிப்படுத்துகிறது” என தயாசிறி கூறினார்.

No comments:

Post a Comment