இலங்கையுடனான
மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் தமிழக அரசு தலையிடக் கூடாது என
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.இது குறித்து தில்லியில் வியாழக்கிழமை அவர் கூறியது: இலங்கை அரசுடனான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் தமிழக அரசு தலையிடுவதை நிறுத்த வேண்டும்; தமிழகம் வரும் சிங்களர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச மத்தியப் பிரதேச மாநில வருகைக்கு மதிமுக தலைவர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் ராஜபட்ச வருகையின்போது ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய சுவாமி, மத்தியப் பிரதேசத்தில் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவரை மாநில அரசு கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment