
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
"நாடாளுமன்றத்தில் வைகோ' என்ற நூலை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.
நெடுமாறன் வெளியிட, அதைப் பெறுகிறார் வி.ஐ.டி. பல்க
சென்னை,
செப். 8: இந்தியாவுக்கு வரும் ராஜபட்சவுக்கு எதிரான கறுப்புக் கொடி
போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டாலும் அதையும் மீறி போராட்டம் நடத்துவோம்
என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.மதிமுக அரசியல் ஆய்வு
மையச் செயலாளர் மு.செந்திலதிபன் தொகுத்த "நாடாளுமன்றத்தில் வைகோ' நூல் வெளியீட்டு விழா, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் நூலை வெளியிட, விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் முதல் நூலைப் பெற்றார்.விழாவில் வைகோ பேசியது:தமிழர்களைக் கொன்று குவித்தவர் ராஜபட்ச. சாஞ்சி நிகழ்ச்சியில் பங்கேற்க அவரை வரவேற்றதாகக் கூறிய பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பின்னர் இல்லை என்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை சென்றபோது சுஷ்மா மட்டும் ராஜபட்சவை ஏன் தனியாகச் சந்தித்தார் என்ற கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது.சாஞ்சிக்கு வரும் ராஜபட்சவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக சென்னையில் இருந்து பஸ்களில் பயணிக்கிறோம். நாங்கள் நடத்தும் சிலுவைப் போருக்கு ஆதரவு தாருங்கள் என்று மத்தியப் பிரதேச முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அவர் ஆதரவு தராமல் எங்கள் போராட்டத்துக்கு தடை விதித்தாலும் அதை மீறிப் போராட்டம் நடத்துவோம் என்றார் வைகோ.மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், கொளத்தூர் மணி, பெ.மணியரசன், தியாகு, பாடலாசிரியர் தாமரை உள்பட பலர் பங்கேற்றனர்.
First Published : 09 Sep 2012 02:40:58 AM IST
source: dinamani
No comments:
Post a Comment