கேப்பாப்புலவு கிராம மக்கள் போர் முடிவிற்கு வந்து மூன்றாண்டுகள்
பூர்த்தியாக்கப்பட்ட நிலையிலேயும் இவர்களது கிராமத்தில்
மீள்குடியேற்றப்படாது இன்னும் செட்டிக்குளம் நலன்புரி நிலையங்களிலேயே தமது
வாழ்நாளை கழித்து வருகின்றனர்.
சிறிலங்கா அரசாங்கத்தினதும், அரச படைகளினதும் திட்டமிட்ட வகையிலான நில
ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது தமிழர்களின் இன்னொரு
பூர்வீகக் கிராமம்.
தமக்கென தனித்துவமான பண்பாட்டு பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள், தொழில் என தனித்துவத்தோடு வாழ்ந்து வந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட MU/102ம் இலக்க கேப்பாப்புலவு கிராம மக்கள் போர் முடிவிற்கு வந்து மூன்றாண்டுகள் பூர்த்தியாக்கப்பட்ட நிலையிலேயும் இவர்களது கிராமத்தில் மீள்குடியேற்றப்படாது இன்னும் செட்டிக்குளம் நலன்புரி நிலையங்களிலேயே தமது வாழ்நாளை கழித்து வருகின்றனர்.
குறிப்பிட்ட கிராமத்திலுள்ள நிலங்கள் படையினரின் பயன்பாட்டில் உள்ளமையே இவ் அவல நிலைமைக்கு காரணமாகும்.
இப்பிரதேசத்தில் தமது இருப்பு நிலைகளையும், படை முகாம்களையும் அமைத்துக் கொண்டு, மக்களின் சொந்த விளைநிலங்களில் இரணுவத்தின் தேவைக்காக படையினரால் பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளையும், அவர்களால் விநியோகிக்கப்பட்டு வருகின்ற உலருணவினையும் எதிர்பார்த்தபடி தொடர்ந்தும் தமது வாழ்க்கையை முட்கம்பி வேலிகளிடப்பட்ட முகாம்களிற்குள் கழித்துக்கொண்டிருக்கின்ற கேப்பாபுலவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசு எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதிருப்பது இப்பிரதேச மக்களின் எதிர்காலம் தொடர்பில் கேள்விக்குறியாய் உள்ளது.
வளங்களும் வனப்பும் மிகுந்த கேப்பாப்புலவு கிராமம்:

கேப்பாப்புலவு கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட புலக்குடியிருப்பு, கேப்பாபுலவு, சூரிபுரம், சீனியாமேட்டை ஆகிய குக்கிராமங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக சுமார் 2800 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதான இப்பகுதியில், மக்களின் குடியிருப்பு நிலமாக இருந்தது 480 ஏக்கர் வரையான நிலப்பரப்பேயாகும். தவிர, 500 ஏக்கர் வயல் நிலமாக காணப்பட்டது. ஏனைய பகுதி காடாகவும், பற்றைகளாகவும் காணப்பட்டன.
இக்கிராமத்தில், பொதுநோக்கு மண்டபம், முன்பள்ளி, 19 பொதுக் கிணறுகள், பாடசாலை, பொது விளையாட்டு மைதானம், முருகன் கோவில், கொட்டடி பிள்ளையார் கோவில், சீனியாமோட்டைக்குளம் போன்றவை மக்களின் பாவனைக்குரிய சொத்துக்களாக அமைந்திருந்தன. இவை தவிர, பனை, தென்னை
குறித்த கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் மீள்குடியேற்றப்படாமல் சுமார் 412 குடும்பங்களைச் சேர்ந்த 1648 பேர் வரையானோர் தமது சொந்த இடத்தில் எப்போது மீள்குடியேற்றப்படுவோம் என்ற ஏக்கத்தோடு, உறவினர்கள்-நண்பர்கள் வீடுகளிலும், வவுனியா செட்டிகுளம் நலன்புரி நிலையத்திலும் தங்கியுள்ளனர் என்பது கவலையளிக்கும் விடயமே.
படையினரின் பயன்பாட்டில் பயன்தரு வளங்களும் நிலமும்:
சைவர்கள் வாழ்ந்த கேப்பாபுலவில் புதிதாய் ஒரு புத்தர் சிலை:
அத்துடன், கேப்பாபுலவு கிராமசேவையாளர் பிரிவிலுள்ள சூரியுரம் குக்கிராமத்தில் அமைந்துள்ள பொதுவிளையாட்டு மைதானத்தில், 6 அடி உயரமுடைய புத்தர்சிலை ஒன்றை இராணுவத்தினர் நிர்மாணித்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
எங்கள் நிலத்தில் எங்களை குடியேற்றுங்கள் - கோரிக்கை விடுக்கும் குடும்பங்கள்:
இந்நிலையில், கேப்பாபுலவை சேர்ந்த குடும்பங்கள் இணைந்து தம்மை விரைவில் மீள்குடியேற்றக் கோரி மீள்குடியேற்ற அமைச்சர், முல்லைத்தீவு அரசாங்க அதிபர், முல்லைத்தீவு இராணுவக் கட்டளைத் தளபதி, சிறிலங்கா அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வடமாகான ஆளுனர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிற்கு தொடர்ந்தும் மனுக்களை சமர்ப்பித்துள்ளனர். (பிரதிகள் இணைக்கப்பட்டுள்ளன). இருந்தும் இவர்களது கோரிக்கைக்கு யாரும் இதுவரை செவி சாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்காலிக குடியேற்றத்திற்கான அரசின் ஏற்பாடுகள்:
இவர்களது மீள்குடியேற்றம் தொடர்பில், 25.07.2012ம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட காணி திட்டமிடல் பணிப்பாளர் செட்டிகுளம் நலன்புரி நிலையத்திற்கு வருகைதந்து கேப்பாபுலவு கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட கிராமவாசிகளை அழைத்து அவர்களுடன் அவர்களது காணிகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தியிருந்தார்.
இக்கலந்துரையாடலின் போது, கேப்பாபுலவு கிராமம் இராணுவத் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக, குறித்த கிராமவாசிகள் அனைவரையும் சீனியாமோட்டை மற்றும் சூரிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள காட்டுப்புறத்தில் தற்காலிகமாக தங்கவைப்பதெனவும், விரைவில் அவர்கள் தத்தமது காணிகளில் மீள்குடியேற்றப்படுவர் எனவும் இதற்கு இப்பிரதேசத்தினைச் சேர்ந்த குடும்பங்களின் ஒப்புதலை கோரியே தான் இக்கலந்துரையாடலை மேற்கொள்வதாகவும் காணி திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
இவரது கருத்தினை ஏற்றுக்கொள்ளாத கேப்பாபுலவு கிராமவாசிகள் “நாம் எங்களுடைய சொந்த காணியில் மாத்திரமே மீள்குடியேறுவோம். வேறு எந்த இடத்திலும் குடியேறுவதற்கு நாம் தயாராக இல்லை” என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
அறவழியில் ஆலயத்தில் வேண்டுகை:
தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றப்பட வேண்டுமென்று
இப்பிரதேச மக்கள் தமது குலதெய்வமான வற்றாப்பளை கண்ணகி அம்மனின் ஆலயத்தில்
சிறப்பு பூசை வழிபாடுகளையும், பிரார்த்தனையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ அதிகாரிகளின் கோரிக்கை:
இந்நிலையில், குறித்த கிராமத்தின் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள், பாவனைக்குள் வைத்துக்கொண்டிருக்கின்ற இலங்கை இராணுவத்தின் 51வது படைப்பிரிவின் தலைமை அதிகாரிகள் குறித்த நிலப்பகுதியினை தம்மிடமிருந்து மீளப்பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டாம் எனவும், அப்பகுதிகளிற்குச் சொந்தமாக குடும்பங்களிற்கு வேறு இடங்களில் மாற்றுக் காணிகளை வழங்குமாறும் முல்லை மாவட்ட அரச அதிபர் செயலக அதிகாரிகளை கோரி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவு காத்த கிளிகளாய் கேப்பாபுலவு மக்கள்:
இறுதிப் போரின்போது உறவுகள் மற்றும் உடைமைகளை இழந்து அனுபவித்த துயரங்களை மறப்பதற்கு வழியின்றியும், தொலைக்கப்பட்ட தமது வாழ்வாதார வளங்களையும், இதர சொத்துக்களையும் மீளப் பெற்றுக்கொள்வதற்கு தமது சொந்த நிலமே தமக்கு கைகொடுத்துதவும் என்ற பெரும் எதிர்பார்ப்போடு தமது மீள்குடியமர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற கேப்பாபுலவு மக்களின் கனவை அரசு கருத்தில் கொள்ளுமா?
கேப்பாபுலவு மக்களின் வேண்டுகை கடிதங்களிற் சில…
1. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளிற்கான உயர் ஆணையாளர் செயலகத்திற்கு எழுதிய கடிதம்:

2. சிறிலங்கா அதிபருக்கு எழுதிய கடிதம்:

3. நாமல் ராஜக்சவிற்கு எழுதிய கடிதம்:

4. முல்லை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதிக்கு எழுதிய கடிதம்:

5. முல்லை மாவட்ட அரச அதிபருக்கு எழுதிய கடிதங்களில ஒன்று:

No comments:
Post a Comment