போர்
முடிவுக்கு வந்த பின்னர் இலங்கைக்குத் திரும்பும் தமிழ் அகதிகளை,
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. புலனாய்வுப் பிரிவின் முகவர்கள் ஆட்சேர்ப்புச்
செய்வதற்குத் தீவிரமாக முயற்சிப் பதாக, தமிழக அரசின் புலனாய்வுச் சேவை,
இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் அனுப்பியுள்ளது. ரைம்ஸ் ஒவ் இந்தியா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு டையவர் என்ற சந்தேகத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த
தமீம் அன்சாரி என்பவர், அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர்
இலங்கையில் தங்கியிருந்த போது, ஐ.எஸ்.ஐ செயற்பாட்டாளரான ஹாஜி என்பவர்
இவருடன் தொடர் புகளை ஏற்படுத்தினார்.
இந்தியாவுடன் நன்கு பரிச்சயமானவர்கள் என்பதாலும், சந்தேகமின்றித்
தகவல்களைத் திரட்ட முடியும் என்பதாலும் நாடு திரும்பும் தமிழ் அகதிகளை
ஐ.எஸ்.ஐ வாடகைக்கு அமர்த்துவதாகப் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கைத் தமிழ் அகதிகளை கண்காணித்து வரும் தமிழக் அரச புலனாய்வுச்
சேவையான கியூ பிரிவின் புலனாய்வாளர்கள், ஐ.எஸ்.ஐ செயற்பாட்டாளர் ஹாஜி
மற்றும் அவரது உதவியாளர்களான கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் விஸா
பிரிவில் பணியாற்றும் சாஜி, அமீர் சுபைர் சித்திக் ஆகியோருக்கு எதிராக
வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அன்சாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில்
இவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று
தமிழகப் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment