Thursday, October 11, 2012

விரிவுரையாளர்களின் 100 நாள் வேலைநிறுத்தம் இன்றுடன் முடிவு

imagesபேராசிரியர்கள், விரிவுரையாளர்க ளின் வேலைநிறுத்தம் இன்று நூறாவது நாளுடன் முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்துக்கும், அரசுக்குமிடையில் நடைபெற்ற நீண்ட சுற்றுப் பேச்சுவார் த்தைகள் சாதகமான முறையில் முடிவடைந்திருக்கும் நிலையில் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று கைவிடப்படவிருப்பதாக அவ்வட்டா ரங்கள் மேலும் தெரிவித்தன.
பேராசிரியர்கள் மற்றும் விரிவுரை யாளர்கள் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்றுடன் முடிவுக்குக் கொண்டுவந்து, கடமைக்குத் திரும்ப அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. பல் கலைக்கழக விரிவுரையாளர் சங்கமும், அரசாங்கமும் இணைந்து கூட்டறிக்கை யொன்றை வெளியிடுவதற்கும் முடிவு செய்துள்ளனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களுக்குமி டையே நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற நீண்ட நேர பேச்சு வார்த்தையில் எட்டப்பட்ட இணக் கப்பாட்டுக்கு அமையவே இத்தீர்மானங் கள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்று நூறாவது நாளாக நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மத்தியஸ்தராக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்துகொண்ட முதலாவது பேச்சுவார்த்தை செப்டெம்பர் 17ஆம் திகதி நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கு அமையவும், உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமையவும், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர ஆகியோரின் பங்களிப்புடன் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதேபோன்று, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன், அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் பேச்சுவார்த்தையொன்றை நடத்தியிருந்தார். இப்பேச்சுவார்த்தையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும், பல்கலைக்கழக உபவேந்தர்க ளும் கலந்துகொண்டு இந்த இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பான பேச்சுவார்த்தையொன்றும் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை நிதியமைச்சில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையும் சாதகமாக அமைந்திருந்தது என்று சங்கத்தின் தலைவர் பேராசிரியர் நிர்மல ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். ஐந்து வருட காலத்துக்குள் நடுத்தர வேலைத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பான நிகழ்ச்சித்திட்டமொன்றை நிதியமைச்சின் செயலாளர், விரிவுரையாளர் சங்கத்திடம் கையளித்திருந்தார்.
அதேநேரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்ற விரிவுரையாளர்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் தகுந்த முடிவொன்றை அறிவிக்காதபோதும், வேலைநிறுத்தத்தை தொடர்வதற்கு இதனை சாதகமாகப் பயன்படுத்தப் போவதில்லை. என்றாலும், இந்த விடயத்தில் தாம் கரிசனை செலுத்தி வருவதாகவும் விரிவுரையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment