Tuesday, October 02, 2012

இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசின் வீடுகட்டும் திட்டம் : 2-ம் கட்ட பணிகள் நாளை துவக்கம்

Indeஇலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்திய அரசு சார்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருந்தார். அதன்படி மத்திய அரசு சார்பில் 1300 கோடி மதிப்பீட்டில் 43 ஆயிரம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக வடக்குப் பகுதியில் 1000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2-ம் கட்ட வீடுகள் கட்டும் திட்டம் மன்னாரில் காந்தி ஜெயந்தி நாளில் நாளை தொடங்குகிறது. பொருளாதார வளர்ச்சி மந்திரி பசில் ராஜபச்சே மற்றும் இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் கே.கந்தா ஆகியோர் பணிகளை துவக்கி வைக்க உள்ளனர். இத்திட்டத்தின்மூலம் 1500 பயனாளிகள் பயனடைய உள்ளனர்.

இலங்கை அரசின் பரிந்துரையின்பேரில் பயனாளிகள் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீடு கட்டுவதற்கான தொகை (5.5 லட்சம் இலங்கை ரூபாய்) 3 அல்லது 4 கட்டங்களாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும் என்று இந்திய தூதர் கந்தா தெரிவித்தார்.

No comments:

Post a Comment