நேற்று
முந்தினம் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை அமைச்சர் கெகலிய ரம்புக்வல
நடத்தியிருந்தார். இம் மாநாட்டில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் அவரை
கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்தார்கள். கே.பி ஒரு குற்றவாளியா
இல்லையா என்று ஒரு நிருபர் கேள்வி கேட்க்க அவர் குற்றவாளி இல்லை என்றார்,
ரம்புக்வல. ஆனால் அவர் வீட்டுக் காவலில் உள்ளார் என்று தெரிவித்தார். இதனை
அடுத்து அவரை ஏன் வீட்டுக்காவலில் வைக்கவேண்டும் அப்படி என்றால் ஆவர்
குற்றவாளி தானே என்றார்கள் நிருபர்கள். தமது விசாரணை முடியவில்லை அதனால்
தான் தமது அரசு அவரை வீட்டுக்காவலில் வைத்துள்ளது என்றார் ரம்புக்வல.
அப்படி என்றால் ஒரு வீட்டிக் காவலில் உள்ள குற்றவாளி எவ்வாறு அரச சார்பற்ற
ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க முடியும் என்று கிடுக்குப் பிடிபோட்டார் நிருபர்
ஒருவர்.இதற்கு பதில் அளிக்கமுடியாது அசடு வழிந்த அமைச்சர் ரம்புக்வல, அனுமதி கிடைத்தால் யாரும் தொடங்கலாம் என்றார். அப்படி என்றால் குற்றவாளிக்கு எவ்வாறு அனுமதி கிடைத்தது என்று அடுத்த கேள்வியை மற்றுமொரு நிருபர் தொடுக்க ரம்புக்வல திக்குத் தடுமாறியுள்ளார். ஆக மொத்தத்தில் இலங்கையில் குற்றவாளிகள் எல்லாரும் சிறையில் இருந்தபடி தொண்டர் நிறுவனங்களைத் திறக்க முடியும் என்கிறது இலங்கை அரசு. தெற்காசியப் பிராந்தியத்தில் அதிசயமான சட்டமூலங்களைக் கொண்ட நாடாக இலங்கையைப் பிரகடனப்படுத்தலாம் போல இருக்கே. அப்படி என்றால் உலகில் உள்ள அனைத்து குற்றவாளிகள் இங்க ஓடிவந்து நிறுவனங்களை ஆரம்பிப்பார்களே.....
No comments:
Post a Comment