Thursday, October 04, 2012

தமிழினத்தின் அடையாளத்தை அரசு திட்டமிட்டு அழிக்கின்றது.சுரேஸ்

Sures_CI1வடகிழக்கில் பௌத்தர்களே வாழாத பகுதிகளிலெல்லாம் அரசாங்கம் விகாரைகளை அமைத்து யுத்தத்தின் பின் மிச்சமாயிருக்கும் தமிழர்களின் அடையாளங்களை சீரழிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கத்திற்கு காவடி எடுக்கும் சிலரே யாழில் பௌத்த அற நெறிப்பாடசாலை அமைத்திருக்கின்றனர்.
இவர்களுக்கு பௌத்த அறநெறியின் மீதோ, இன நல்லிணக்கத்தின் மீதோ எந்தவித அக்க றையும் கிடையாது.
அரசாங்கத்திற்குக் காவடி எடுத்து, அரசாங்கத்தின் சலுகைகளில் குளிர் காய நினைக்கின்றார்கள்.

என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், அதன் உத்தியோ கபூர்வ பேச்சாளருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் பௌத்த அறநெறி பாடசாலை அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவி த்தபோதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
நீண்ட யுத்தத்தின் பின்னர் இன்று நொந்துபோயிருக்கும் தமிழினத்திடம் மிஞ்சியிருக்கும் தனித்துவமான இன அடையாளங்களை சிதைப்பதற்கு இன நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழர்கள் சிலர் உடன்படுவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
பௌத்தர்களே இல்லாத யாழ்.குடாநாட்டில் பௌத்த அறநெறிப்பாடசாலை அமைக்கப்படும் செய்தியறிந்தால் அனைவருக் கு ம்  வியப்பாகவே இருக்கும்.
எனவே இது ஒரு திட்டமிட்ட மத மாற்ற முயற்சியாகவே அமையலாம். தமிழ்,சிங்கள இனங்களுக்கிடையில் ஒரு ஆக்கபூர்வமா ன முயற்சியையும் மேற்கொள்வதில்லை.
செத்தவர்கள் செத்துப்போக, அழிந்தவைகள் அழிந்துபோக, மீதமாயிருக்கும் தமிழர்களின் தனித்துவமான அடையாளங்களை தமிழர்கள் என்ற வகையில் காப்பாற்றுவதற்கே இவர்கள் முயற்சித்திருக்கவேண்டும்.
ஆனால்இந்த அரசு அவற்றை சிதைப்பதற்கு தான் முயற்சிப்பார்கள். என வே இதுகுறித்து மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment