Monday, October 01, 2012

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் வலியுறுத்துகிறார் ரவிசங்கர்

news
அகதிகள் முகாம்களில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு, இந்திய குடியுரிமையைக் கட்டாயம் வழங்க வேண்டும்.அவர்களுக்கு அனைத்து சுதந்திரமும் வழங்கவேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் வாழும் கலை அமைப்பின் நிறுவுநர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் நேற்று இடம்பெற்ற கல்வியின் விழுமியங்களை மேம்படுத்துவது குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
இலங்கை அகதிகள்  25-30 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கின்றனர். இதன் காரணமாக இந்தியா பெருமை கொள்ள வேண்டும்.அவர்களின் குழந்தைகள் பலர் இந்தியாவில் பிறந்துள்ளனர்.  
 
தமிழின் பெருமைகளை மாணவர்கள் அறிந்து கொண்டால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
 
ஜப்பானிய மொழியில் தமிழ் சொற்களின் தாக்கம் அதிகம் உள்ளது. இதேபோல, தென் அமெரிக்க நாடான பெருவுக்கு சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடர்கள் சென்றுள்ளனர் என்பது போன்ற தகவல்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.
 
இதனால் மாணவர்களுக்கு மொழியின் மீதான மதிப்பு அதிகரிக்கும். மொழியின் மீதான மதிப்பு அதிகரித்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன்மூலம், அவர்கள் சொந்த காலில் நிற்கமுடியும் என்றார் அவர். கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருப்பதாலேயே வன்முறை எண்ணங்கள் அதிகரிக்கின்றன. வன்முறை என்பது பிறப்பில் இருந்து வருவது இல்லை. என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
 

No comments:

Post a Comment