Monday, October 01, 2012

இலங்கைக் கடற்படையினர் எம்மை கற்கள் வீசித் தாக்கினர்; இராமேஸ்வரம் மீனவர்கள்


news
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி குறித்த மீனவர்கள் இராமேஸ்வரத்திலிருந்து கடந்த சனிக்கிழமை காலை 800 படகுகளில் இலங்கை கடல் எல்லையில் அன்றைய தினம்  மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளை அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறியதுடன்  கருங்கற்களை சரமாரியாக மீனவர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.


அதனையடுத்து தொடர்ந்தும் தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து கடலில் வீசிவிட்டும் சென்றுள்ளனர்.

இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 10 படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா .1 இலட்சம் ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படையினரின் இந்த செயலினால் தமது தொழிலையும் இடை நடுவே விட்டு விட்டு  தாக்குதலிலிருந்து தப்பி இரவோடு-இரவாக மீனவர்கள் இராமேஸ்வரம் வந்தடைந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்தச் செயலானது நீண்ட காலமாக நடைபெற்று வருகின்ற ஒரு விடயமாக காண்பட்டு வருகின்றது ஆனாலும் பல தடவைகள் 2 நாடுகளும் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும் இறுதியான முடிவு எதனையும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment