Monday, October 01, 2012

இறுதி தீர்வுக்கு இந்தியா உத்தரவாதம் அளித்தால், தெரிவுக்குழுவில் பங்கேற்கத் தயார் சுரேஸ்

timthumbஇந்திய அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் ஒரு உடன்பாடு எட்டப்படும் என்று உத்தரவாதம் அளிக்குமேயானால், உத்தேச நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“தற்போதைய நிலைமைகள் தொடர்பாக இந்தியத் தூதரகத்துக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும், சிறிலங்கா வந்த இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே விளக்கிக் கூறியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துமேயானால், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் இறுதியாக ஒரு உடன்பாடு எட்டப்படும் என்று அவர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இதன் விளைவு பற்றிய ஒரு உத்தரவாதம் எமக்குத் தேவை.
இந்திய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்தையும், அரசியல் கட்சிகளையும் அரசியல் தீர்வு ஒன்றுக்கு இணங்க வைக்க முடியும் என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் பங்கேற்கும்.
கடந்த காலங்களில் அரசியல் தீர்வு குறித்த திட்டங்களை பல குழுக்களின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட போதும் அவை கருத்தில் எடுக்கப்படவில்லை” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment