Friday, October 05, 2012

இலங்கை அமைச்சர் பேச்சு: வைகோ, ராமதாஸ் கண்டனம்

இலங்கை ராணுவத்தினர் இந்தியாவில் பயற்சி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அமைச்சர் பேசியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைகோ: இலங்கை அரசின் அமைச்சரும், ராஜபட்சவின் சகோதரருமான பசில் ராஜபட்ச கொழும்புவில் பேசும்போது, இனி என்ன எதிர்ப்பு இருந்தாலும் இலங்கை ராணுவ வீரர்கள் இந்தியாவில் தொடர்ந்து பயிற்சி பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.
இந்தியாவை நடத்துவது மன்மோகன் சிங் அரசா, ராஜபட்சவின் குடும்பமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவின் முப்படைகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தித்தான் இலங்கைப் போர் நடைபெற்றது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி வெளிச்சமாகிவிட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தமிழ் இனக் கொலைக்குக் காரணமானவர்கள். இதற்குப் பிறகும் காங்கிரúஸாடு கைகோப்பது தமிழ் இனத் துரோகம் ஆகும்.

ராமதாஸ்: இலங்கை வீரர்கள் இந்தியாவில் பயற்சி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பசில் ராஜபட்ச கூறியுள்ளார்.
இவரது பேச்சு தமிழகத் தலைவர்களுக்கு மட்டுமின்றி, இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.
இலங்கைப் பிரச்னையில் தமிழகத்தின் குரலை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. இதை அனுமதிக்கக் கூடாது.

No comments:

Post a Comment