13ஆவது
அரசமைப்புத் திருத்தம் மாகாணசபைகளுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களைப்
பறிக்கும் திவிநெகும சட்டவரைவு தொடர்பான நிலைமைகளை இந்தியா உன்னிப்பாக
அவதானித்து வருவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுடில்லிப் பயணம் தொடர்பாக கருத்து வெளியிடுகையில், இலங்கை அரசுடனான பேச்சுக்கள் தடைப்பட்டதற்கான காரணங்களை இந்தியத் தலைவர்களுக்கு எடுத்து விளக்கியுள்ளோம். இருதரப்புப் பேச்சுக்களைத் தொடர இலங்கை அரசு சம்மதித்தால் மட்டுமே, நாம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றுவோம்.
இந்தப் பேச்சுக்களில் எட்டப்படும் உடன்பாடுகளைத் தெரிவுக்குழுவின் முன் கொண்டு போகலாம். இலங்கை அரசு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்குப் பதிலாக, அதிகாரங்களைப் பறித்தெடுத்துக் கொள்ளும் எதிர்மாறான வேலையையே செய்கிறது என்பதை, திவிநெகும சட்டவரைவை உதாரணம் காட்டி விளக்கினோம்.
இந்தியா இந்த சட்டவரைவு குறித்து ஏற்கனவே அறிந்து வைத்துள்ளது. 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. என்று கூறினார்
No comments:
Post a Comment