நாளை
மறுதினம் 27ஆம் திகதி தமிழ் மக்கள் தீபங்களை ஏற்றுவதற்குத் தடையேதும்
இல்லை என்றே தான் குறிப்பிட்டார் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்
பெரேரா தெரிவித்துள்ளார்.
மாவீரர் தினத்தில் தீபங்களை ஏற்றலாம் எனத் தான் சொன்னது மாதிரியான அர்த்தத்தைக் கொடுத்துள்ளதாக அவர் வருத்தப்பட்டார்.
மாவீரர் தினத்தில் தீபம் ஏற்றலாம் என்ற அர்த்தம் வரும் வகையில் தான்
ஒருபோதும் சொல்லவில்லை என்றும் கூறினார். எப்படி இருப்பினும் நவம்பர்
மாதம் 27ஆம் நாள் உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள ஈழத் தமிழ் மக்கள் மாவீரர்
தினத்தை இப்போதும் கடைப்பிடிக்கின்றனர்.
இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் மூன்று வருடங்களுக்கு முன்னர்
வரை மாவீரர் தின நிகழ்வுகள் வெகுவிமர்சையாக நடத்தப்பட்டு வந்தன. கடந்த
மூன்று வருடங்களாக மாவீரர் தினத்தைக் கடைப்பிடிக்க இராணுவத்தினர் தடை
விதித்து வருகின்றபோதும் ஆங்காங்கே மக்கள் இத்தினத்தை கடைபிடித்து
வருகின்றனர்.
கடந்த வருடம் மாவீரர் தினத்தையொட்டி யாழ். பல்கலைக்கழக மாணவர்
விடுதியில் பெரியளவில் மாவீரர் சுடர் ஏற்றப்பட்டதாக மாணவர்கள்
தெரிவித்தனர். ஆனால் இதனை இராணுவத்தினர் மறுத்தனர். தாம் விடுதியின்
உள்ளேயும் சுடர்களை ஏற்றி மாவீரர் தினத்தைக் கடைப்பிடித்தனர் என்று
மாணவர்கள் அறிவித்தனர்.
தமிழ் மக்களுக்காகப் போராடி இறந்த போராளிகளின் நினைவாகக்
கொண்டாடப்படும் மாவீரர் தினத்தின் இறுதி மூன்று நாள் முக்கிய நிகழ்வுகள்
இன்றைய தினம் ஆரம்பமாவது வழமை. பிரதிப் பொலிஸ் மா அதிபர் விளக்கம்
No comments:
Post a Comment