சிங்களப்
பேரினவாத அரசினால் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு பெரும் துயரினைச்
சுமந்து நிற்கும் தமிழீழத் தாயக மக்களுக்கு கரங்கொடுக்க கனடாவில் தளிர்
எனும் அமைப்பொன்று துளிர்விடுகின்றது.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் குடும்பங்கள் மற்றும் போராளிக் குடும்பங்கள் நலண்பேணும் அமைச்சகத்தின் செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக தளிர் திட்டம் கனடாவில் தோற்றம் பெறுகின்றது.
இந்த திட்டத்தின் ஊடாக தமிழீழத் தாயக உறவுகளுக்க கனேடிய உறவுகள் தங்களின் பங்களிப்பினை நேரடியாகவே தாயக உறவுகளோடு தொடர்பினை ஏற்படுத்தி அவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கான தொழில்வாய்பினை ஏற்படுத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதே தளிரின் பிரதான செயற்பாடாகவுள்ளதென இதன் ஓருங்கிணைப்பாளர்களில் ஒருவரான துணை அமைச்சர் ஜோய் அன்ரனி அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment