செங்கல்பட்டு
சிறப்பு முகாம், பூந்தமல்லி சிறப்பு முகாம், புழல் சிறைச்சாலை என
அலைக்கழிக்கப்பட்ட ஈழத்தமிழர் செந்தூரன். தன்னுடைய கோரிக்கைகளை முன்வைத்து
தொடர் உண்ணாவிரதப் போராட்டம் செய்து விடுதலையான அவரிடம் பேட்டி எடுத்தது
விகடன்.
”தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்கள் எப்படி இருக்கின்றன?”
”அதன் பெயர் மட்டும்தான் சிறப்பு முகாம். அங்கே எந்த ஒரு சிறப்பும் இல்லை. 1946-ம் ஆண்டு ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்ட அயல்நாட்டுச் சட்டத்தின் கீழ் க்யூ பிரிவு பொலீஸார், ஈழத்தில் இருந்து வரும் தமிழர்களைக் கண்காணிக்க அனுமதி வாங்குகின்றனர். ஆனால், அயல்நாட்டவர் சட்டத்தில், ஒரு நபரை அவரின் குடும்பத்தை விட்டுப் பிரித்துக் கண்காணிக்க வேண்டும் என்றோ, இதுபோன்ற சிறப்பு முகாம்களில்தான் அடைத்து வைக்க வேண்டும் என்றோ சொல்லப்படவில்லை.
கண்காணிக்கப்படும் நபரை குடும்பத்துடன் வீட்டுக்காவலில் வைத்து, அவரின் அடிப்படைத் தேவைகள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் சிறப்பு முகாம்களில் சட்டத்துக்குப் புறம்பாகவே நடத்தப்படுகிறார்கள்.”
”திறந்தவெளி முகாம், சிறப்பு முகாம், சிறைச்சாலை மூன்றிலும் இருந்திருக்கிறீர்கள். அவற்றில் எப்படி நடத்தப்பட்டீர்கள்?”
”சிறைச்சாலையில் மனிதநேயத்தோடும் மனிதாபிமானத்தோடும் நடத்தப்பட்டேன். திறந்தவெளி முகாம்களைப் பொறுத்தவரை, அயல்நாட்டவர் சட்டம் சரியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நாங்கள் தங்க வைக்கப்பட்ட இடம் குடும்பம் சார்ந்த இடமாக இருந்தது. ஆனால், சிறப்பு முகாம்களில் சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்பட்டோம். சிறைச்சாலைகளைவிட மோசமான இடத்தில் அடைத்து, ‘இதுதான் உன் குடியிருப்பு’ என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? குடியிருப்பு என்று சொல்லப்படும் சிறப்பு முகாம்களில் வசிப்பவர், அயல்நாட்டவர் சட்டத்தின் கீழ் சினிமாவுக்குச் செல்லலாம். வேலைக்குச் செல்லலாம். ஆனால் இந்தச் சலுகைகள் எல்லாம் சிறப்பு முகாம்களில் இல்லை.”
‘உண்ணாவிரதத்தின்போது உங்களைப் பார்க்க வந்த க்யூ பிரிவு எஸ்.பி-யான சம்பத்குமார் சில வாக்குறுதிகளைக் கொடுத்தார். அவை நிறைவேற்றப்பட்டதா?”
”21 நாட்கள் உண்ணாவிரதத்துக்குப் பிறகு எஸ்.பி. வந்து எங்களைச் சந்தித்தார். ஓர் அதிகாரியைப் பார்ப்பதற்கே 21 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டி உள்ளது. என்னைச் சந்தித்த அந்த எஸ்.பி. உண்ணாவிரதத்தைக் கைவிடச்சொன்னார். அப்போது வைகோ போன் செய்து, ‘அரசாங்கத்துக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுங்கள்’ என்று ரொம்பவும் தயவாகக் கேட்டுக்கொண்டார். அதனால், நானும் சம்மதித்தேன். விடுதலை செய்வதாக அந்த எஸ்.பி. கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தேன். அதனால், என்னை பூந்தமல்லி முகாமுக்கு மாற்றினார்கள். ஆனாலும், முடிவில் மாற்றமில்லாமல் சொன்ன திகதியில் இருந்து பூந்தமல்லி முகாமில் உண்ணாவிரதம் மேற்கொண்டேன்.”
”அப்போது க்யூ பிரிவின் அணுகுமுறை எப்படி இருந்தது?”
”நான் உண்ணாவிரதம் இருந்த 37 நாட்களில், அதைத்தடுக்க க்யூ பிரிவினர் பல வழிகளைக் கையாண்டனர். ஆனால், அவை தோல்வி அடைந்தன. 22 நாட்கள் கழித்து, தற்கொலை முயற்சி என்று வழக்குப்பதிவு செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அங்கும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தேன். அந்தச் சிறைச் சாலையில் எனக்கு ஆதரவாக சிலர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அதைத் தடுப்பதற்கு ஒரு பிரிவினர் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.
இதைப் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் சிறையில் கலவரம் ஏற்படலாம் என்ற சூழலில் உண்ணா விரதத்தைக் கைவிடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன். மரணத்தைவிட கொடுமையானது ஒருவன் மனநோயாளியாக ஆக்கப்படுவது. அதைத்தான் இவர்கள் செய்கிறார்கள்.”
”பல்வேறு குற்றப் பின்னணியில் இருப்பவர்களைத்தான் சிறப்பு முகாம்களில் அடைத்து வருகிறோம் என்கிறதே போலீஸ்?”
”குற்றம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுங்கள். அதைச் செய்வதில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்ட யாரும் சிறப்புமுகாமில் இல்லையே? க்யூ பிராஞ்ச் என்பது தீவிரவாதிகளையும் நக்சல்களையும் மாவோயிஸ்ட்களையும் அடையாளம் கண்டு, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஏஜென்சி. அவர்கள், இலங்கையில் இருந்து வரும் அனைவரையும் தீவிரவாதிகளாகவே நினைக்கின்றனர். இலங்கைப் படகில் நாய்க்குட்டி வந்தாலும், அதைப் புலி யாகத்தான் கருதுகின்றனர்.”
”அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாக இலங்கைத் தமிழர்கள் தப்பிச் செல்கிறார்களே?”
”க்யூ பிரிவின் சித்ரவதையைத் தாங்க முடியவில்லை. அதனால்தான் செல்கிறோம்’ என்று தப்பிச் செல்பவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் செல்ல தேர்வு செய்த இடம் சரி. ஆனால், செல்லும் வழிமுறைதான் தவறு. அதை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு ஐ.நா-வுக்கு உள்ளது. ஒரு வெளிநாட்டினருக்கும் அகதியாக வருபவனுக்குமான வித்தியாசத்தை க்யூ பிரிவினர் இனம்காண வேண்டும். ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைபவனுக்கு மட்டும் அயல் நாட்டவர் சட்டத்தை பாய்ச்சுங்கள். உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடிவரும் இலங்கைத் தமிழர்களையும் கொடுமைப்படுத்துவது நியாயமா?”
”டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்கிறீர்களா?”
”ஈழத்தில் முள்வேலியில் உள்ள எங்கள் உறவுகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பும் அரசியல் கட்சிகளுக்கு, இங்கே இருக்கும் சிறப்பு முகாம்கள் ஏனோ கண்களுக்குத் தெரியவில்லை. இரண்டு முறை அறிக்கை விட்டார் கருணாநிதி. செங்கல்பட்டு, பூந்தமல்லியில் இருக்கும் 40 பேருக்கு அவரால் விடுதலை பெற்றுத்தர முடியவில்லை. அவரா 40 லட்சம் பேருக்கு விடுதலை பெற்றுத்தரப் போகிறார்?”

No comments:
Post a Comment