Saturday, November 17, 2012

ஐ.நாவின் இரகசிய அறிக்கையில் சில பகுதிகளை கறுப்பு மையினால் அழித்தமை சரியானதே! – ஐ.நாவின் உயரதிகாரி

susannaஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறியமை தொடர்பான அறிக்கையில் சில பகுதிகளை கறுப்பு மையினால் மறைக்கப்பட்டிருந்தமையை சரி என்கிறார் ஐ.நா அமைப்பின் உயரதிகாரி ஒருவர்.
ஐ.நா. அமைப்பின் பணியாளர்களை பாதுகாக்கவும், சில இரகசிய ஆவணங்களைப் பாதுகாக்கவும் மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகளை தணிக்கை செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரி சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார்.
சில தகவல்கள் உள்ளகத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமுமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளக அறிக்கைகளின் சகல விடயங்களையும் பகிரங்கப்படுத்துவது பொருத்தமான தீர்மானமாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில தகவல்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்துவது பொருத்தமாகது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பக்கச்சார்பற்ற வகையிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூடுதல் சிரத்தை எடுத்துக் கொண்டதாக சுசனா மெல்கொரா மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment