
இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன் வைக்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தத்துக்கு மாற்றம் கொண்டு வர வேண்டுமென்கிறார் ஒரு அமைச்சர். 13 பிளஸ் என்கிறார் ஒரு அமைச்சர். 13 ஆவது அரசியலமைப்பை ஒழித்துவிட வேண்டுமென்கிறார்
மற்றுமொரு அமைச்சர். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த அரசு எந்த காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலும் குழப்ப நிலையைத் தோற்றுவித்துள்ளது.
இந்த ஆட்சி மொத்த நாட்டையும் சூறையாடி விட்டது. நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தலையிட்டு தமக்கு சாதகமாக நீதிமன்றங்களை செயற்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் “”லெப்டொப்” வட்டியில்லா வாகனக்கடன் போன்ற அற்ப சலுகைகளுக்காக இந்த அரசின் ஊழல்களை மறைக்க முயற்சிக்கக் கூடாது. மக்களுக்கு நாட்டின் உண்மை நிலையை எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment