1990
ம் ஆண்டு தொடக்கம் காலம் காலமாக இற்றை வரை சுனாமியாலும் 2008 ல் ஏற்பட்ட
யுத்தத்தினாலும் இடம்பெயர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு தெற்கு
பிரதேசத்திற்கு இதுவரையும் மேல் மட்ட அரச ஊழியர்களின் கவனயீனத்தால்
எவ்வித நிவாரணங்களோ, உதவிகளோ வழங்கப்படவில்லையென மக்கள் விசனம்
தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் வீடு முற்றாக அழிந்தவர்கள் எந்தவித வீட்டுத்திட்டமும்
இல்லாமல் தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தற்காலிக குடிசைகளில்
வாழமுடியாமல் மிகவும் இன்னல்படுகின்றனர்
அவர்களுக்கு உரிய நிரந்தர வீட்டுதிட்டத்தை பெறுவதற்கு உரிய அதிகாரிகள் ஏற்ற நடவடிக்கையினை எடுத்து அவர்களுக்குரிய வீட்டுதிட்டத்தை பெற்று கொடுக்குமாறு சமூக நலன்விரும்பிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அதேவேளை, முல்லைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பல கிராமங்கள் வெள்ளத்தினால் முதன் முறையாக பாதிக்கப்பட்டு, தற்போது இரண்டாவது முறையாகவும் கடும் வெள்ளத்தினால் பயிர் அழிவு வீட்டழிவு போன்றவற்றால் மக்கள் இன்னல்படுகின்றார்கள். அவர்களுக்குரிய நிவாரணம் எதுவும் இதுவரையில் வழங்கப்படவில்லை.
ஏனைய பல கிராமங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்தும் முல்லைப்பட்டணம், உணாப்பிலவு, வட்டுவாகல் ஆகிய கிராமங்கள் முற்றாக வெள்ளத்தால் சூழ்ந்திருந்தும் உரிய அதிகாரிகளின் கவனயீனத்தால் இதுவரையில் எவ்வித நிவாரண உதவியும் கிடைக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment