Tuesday, January 15, 2013

அரசாங்கத்தை கவிழ்ப்பதே ஒரேவழி: ரணில்

20130114-075833.jpgநீதித்துறை தொடர்பான தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதற்காக இருக்கின்ற ஒரேயொரு வழி இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதேயாகும். அதற்காக உங்கள் தலைமையை வழங்குகள்.
என்று சட்டத்தரணிகளிடம் எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சித்தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்து வந்த உள்நாட்டு பத்திரிக்கைகளும் நீதித்துறை விவகாரத்திற்கு பொறுப்பு கூறவேண்டும். நீதித்துறை நெருக்கடிபற்றி ஒரு பத்திரிகையேனும் ஆசிரியர் தலையங்கத்தை தீட்டவில்லை. சிங்கள பத்திரிகை ஒன்று ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ஆசிரியர் தலையங்கத்தை எழுதியிருந்தது.
ஆசிரியர் நியமனத்தில் காணப்படும் பிரச்சினையா? நாட்டில் தற்போது இருக்கின்ற பெரும்பிரச்சினை. தனது இந்த குற்றச்சாட்டுக்ளுக்கு பத்திரிகை ஆசிரியர் சங்கத்தலைவரும் சகல புதினப்பத்திரிகைகளின் ஆசிரியர்களும் பதிலளிக்கவேண்டும்.
இந்த விடயத்தில் மௌனம் சாதிப்பது தமது குற்றச்சாட்டை ஏற்பதாகும். பத்திரிகை ஆசிரியர்கள் ஜனாதிபதியையும் பாதுகாப்பு செயலாளரையும் எத்தனைமுறை சந்தித்தனர் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment