இலங்கையில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக எடுக்கப்பட்டுவருகின்ற நடவடிக்கைகளையிட்டு தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுநலவாய முன்முயற்சிகள் மற்றும் ஏற்கனவே திட்டமிட்டது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி பொதுநலவாயத்தின் மதிப்புகள், கோட்பாடுகள், அரசியலமைப்பு மீறல்கள் தொடர்பில் பொதுநலவாய அமையம் அறிவுறுத்தியிருந்தது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment