இலங்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் முன்னாள் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.
சிவிலியன் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. மேலும் பல்வேறு விடயங்கள் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
அரசியல் முரண்பாட்டு நிலைமைகளின் போது மனித உரிமை விவகாரங்கள் தலைதூக்கும். இவ்வாறான சூழ்நிலைகளின் போது மிகவும் நிதானமாக செயற்பட வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.
எவ்வாறெனினும், மோதல் நிலைமைகளின் போது சிவிலியன் பாதுகாப்பை உதாசீனம் செய்ய முடியாது.
இலங்கை போரின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் சார்ள்ஸ் பெற்றீ தலைமையிலான குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின் மூலம் பல்வேறு விடயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது.
இறுதிக் கட்ட போரின் போது சிவிலியன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிகவும் சவால் மிக்கது.
உலக நாடுகள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றமையினால் சவால்கள் அதிகமாகக் காணப்படுகின்றது என விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடகப் பிரிவிற்கு அளித்த நேர்காணலின் போது நம்பியார் இதனைத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment