Friday, October 25, 2013

என்னை இராணுவத்தினர் கற்பழிப்பார்கள்: கதறி அழும் பெண் BBC கொடுத்த சாட்சியம் !


போர் முடிவடைந்துவிட்டது. சமாதானம் வந்துவிட்டதாக இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் அங்கே உண்மையாக நடப்பது என்ன ? இதோ BBC நிருபர் யாழ் சென்று எடுத்த அடுத்த ஆவணப்படம் நேற்று மாலை(புதன்கிழமை) வெளியாகியுள்ளது. இலங்கையில் இளைஞர்களும் பெண்களும் இன்னமும் சித்திரவதைகளுக்கும் , பாலியல் துண்புறுத்தலுக்கும் ஆளாகிவருகிறார்கள் என்பதனை இந்த ஆவணப்படம் வெளிவாக எடுத்து காட்டுகிறது. 4 நிமிட நேரத்தில், இலங்கையில் தற்போது என்ன நடக்கிறது என்பதனை BBC வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. இதில் ஒரு பெண் தன்னை இலங்கை இராணுவத்தினர் மாறி மாறி கற்பழித்ததாக கூறியுள்ளார். இதனால் தான் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதோடு, அதற்கான மாத்திரைகளையும் எடுத்துவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆண் ஒருவர் தனது சாட்சியத்தையும் இங்கே பதிவுசெய்துள்ளார். தன்னை சந்தேகத்தின் அடிப்படையில் இராணுவம் கைதுசெய்தது என்றும், தன்னை சொல்லொனா சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தன்னை சிறையில் வைத்து விசாரிக்கும்போது ஒவ்வொரு கேள்விகளைக் கேட்க்கும்போதும், தனது ஆண் குறியை இலங்கை இராணுவம் கசக்கி தன்னை துண்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவருமே தமது முகத்தை காட்ட மறுத்துவிட்டபோதும், BBC இதனை ஆவணப்படுத்தியுள்ளது. இலங்கையில் காமன்வெலத் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ள இன் நிலையில், பல ஆதாரங்கள் இலங்கைக்கு எதிராக வெளியாகியவண்ணம் உள்ளது. இது இலங்கை அரசின் மேல் பல அழுத்தங்களை பிரியோகித்தவண்ணம் உள்ளது. 


http://youtu.be/RmpumwQA3Ng

No comments:

Post a Comment